பெர்ன் : சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள சைவநெறிக்கூடம் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 02ம் தேதியன்று மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மார்ச் 02ம் தேதியன்று மாலை 5 மணிக்கு துவங்கி மார்ச் 03ம் தேதி காலை வரை சிறப்பு யாகங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. ருத்ர அபிஷேகம், மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக திருமுறைகளும், பாசுரங்களும் இசைக்கப்பட்டது. பல்வேறு இசைக் கச்சேரிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் இடம்பெற்ற ஆனந்த தாண்டவ நடனம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்து, சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தனர்
No comments:
Post a Comment