|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர்: எதிரிகள் அனுப்பும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது ஒரு அருமையாக செயல்படுத்தப்பட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர் எஸ்.பி.,தாஸ் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையினர் செயல்பட்டு புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இன்று இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் , எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சோதித்து வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

ஒரிசா மாநிலம் தம்ராபாதக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலையில் முன்னதாக 9.35 மணி அளவில் சண்டிப்பூர் கடல்பரப்பில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் 3 நிமிடத்தில் வீலர் தீவில் இருந்து புறப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து தாக்கி அழித்தது. இதில் இருந்து வெண்புகை சீறிக்கிளம்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மைய வட்டாரம் தெரிவிக்கிறது . இது ஒரு சிறப்பாக அமைக்கப்பட்ட , வெற்றிகரமான திட்டம் என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர் எஸ்.பி.,தாஸ் கூறினார்.

பாதுகாப்பு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சித்தன்சுகார் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் , இது பாராட்டத்தக்க விஷயம் . செ<லுத்தப்பட்ட ஏவுகணையை வானில் 16. கி.மீட்டர் செங்குத்து உயரத்தில் சென்று தாக்கி அழித்ததாக கூறினார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...