சென்னை: தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட திரைப்பட கலைஞர் திருநங்கை கல்கி விண்ணப்பித்துள்ளார்.
சகோதரி என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் கல்கி. நர்த்தகி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தேர்தலில் சீட் கேட்டு திருநங்கையொருவர் விண்ணப்பிப்பது இதுவே முதல் முறை.
தி.மு.க. சார்பில் போட்டியிட மனு கொடுத்துள்ள கல்கி, இதுகுறித்துக் கூறுகையில், "அரவாணி என்பதை திருநங்கை என மாற்றியவர் கலைஞர்தான். எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் கட்சி தி.மு.க.தான். தி.மு.க. ஆட்சியில்தான் எங்களுக்கு பல உரிமைகள் கிடைத்தன. எனவே தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பி மனு கொடுத்துள்ளேன்.
நான் தேர்தலில் போட்டி யிட தி.மு.க. தலைவர் சீட் தருவாரா என்று தெரியாது. என்றாலும் என் விருப்பத்தை தலைவருக்கு தெரிவித்துவிட்டேன். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எல்லாருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும். எனக்கு சீட் கேட்டு இதுவரை எந்த தலைவரையும் நான் சந்தித்து பேசவில்லை...", என்றார் அவர்

No comments:
Post a Comment