|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

நியூஜெர்சியில் மகா சிவராத்திரி விழா

நியூஜெர்சி : நியூஜெர்சி அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயிலில் மார்ச் 02 மற்றும் 03 ஆகிய இரண்டு நாட்களும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள், கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீரு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பஜனைக் குழுவினர் வழங்கிய சிறப்பு பஜனைகள் இடம்பெற்றது. காய்கறி அலங்காரம், பழ அலங்காரம், மலர் அலங்காரம் ஆகியவற்றில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் கைகளாலேயே லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து சிவ பெருமானை வழிபட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...