|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

singam_puli_posters_wallpapers_01_thumb உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரத்தில் எல்லா திரையரங்குகளும் மிகக் குறைந்த அளவு ஆடியன்ஸுகளை வைத்து ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் படமெல்லாம் ஏப்ரலுக்கு தள்ளிப் போனதால், புதிய நடிகர்கள், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இப்போது தியேட்டர் கிடைக்கிறது. இதன் நடுவில் கோவிற்கு முன்னால் வெகு நாள் தயாரிப்பிலிருந்த ஜீவாவின் சிங்கம் புலி தியேட்டர்களுக்கு ஆக்ஸிஜனைத் தருமா?

சமீப காலங்களில் ஒரு நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வரும் ஹீரோக்களுள் ஜீவாவும் ஒருவர். அதற்கு காரணம் அவரின் டெடிக்கேட்டடான உழைப்பு. இந்த மாஸ் மசாலா படத்திற்கும் அதே உழைப்பை அளித்து படத்தை நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.வழக்கமான இரட்டை வேட படம் தான். அண்ணன், தம்பி இருவருக்கும் உருவத்தில் வித்யாசமேயில்லை, பாடி லேங்குவேஜில் கூட வித்யாசமில்லை. ஆனால் கேரக்டர்களில் வித்யாசம் மலையளவில் உண்டு. அண்ணன் கோபக்காரன், நியாயத்துக்காக எகிறுபவன். தம்பி வக்கீல், ஸ்த்ரிலோலன், தன் சுகத்துக்காக சொந்த அண்ணனையே போட்டு தள்ள முடிவெடுப்பவன். வீட்டில் சின்ன வயதிலிருந்தே அண்ணனைவிட தம்பியின் பால் அன்பும் ஆதரவும் அதிகமாயிருக்க, தம்பி வீட்டில் நல்லவனாகவும், வெளியே எல்லா தில்லாலங்கடியும் செய்பவனாக இருக்கிறான். அண்ணன்காரன் மீன் கடை வைத்துள்ளான். தம்பியால் ப்ரச்சனைக்குள்ளான பெண்ணொருத்தி தற்கொலை செய்து கொள்ள, அதற்கு காரணமான தம்பியின் மீது கேஸ் தொடுக்கிறான். எல்லா விதமான தகிடுதத்தங்களை செய்து கேஸிலிருது வெளிவரும் தம்பி அண்ணனை கூலிப் படையினரை வைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். முடிந்தானா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்.
உருவத்தில், நடையுடை பாவனையில், கொஞ்சம் கூட வித்யாசமில்லாமல் இருப்பது போன்ற கேரக்டர்களை தன் திறமையான நடிப்பைக் கொண்டு, வித்யாசப் படுத்த முயற்சி செய்திருக்கிறார். சமயங்களில் அவர் எவ்வ்ளவு முயன்றும் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணன் கேரக்டரைவிட, கேஸனோவா தம்பி கேரக்டருக்கு அதிகம் வேலை. அதை சுவாரஸ்யமாய் ரசித்து செய்திருக்கிறார்.கதாநாயகிகள் குத்து ரம்யா, கல்யாணி. இரண்டாம்வருக்கு பெரிதாய் ஏதும் “நடிக்க” சொல்லிக் கொள்கிறார்ப் போலில்லை. ரம்யா ஓகே. ஆனால் ஒரு மாதிரி பரந்து விரிந்து கிடக்கிறார். படத்தின் இன்னொரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர் சந்தானம். மனுஷனுக்கு இப்போ சுக்ர திசை போலருக்கு, ஸ்கீரினில் தெரிந்தாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பழைய ஹீரோ கெட்டப்பில் வந்து கலாய்ப்பது நல்ல காமெடி.
மணிசர்மாவின் இசையில் ஒரே தெலுங்கு வாடை. ஜீவாவும், கல்யாணியும் பாடலைத் தவிர நத்திங் இம்ப்ரசிவ். அதிலும் அந்த பின்னணியிசை அய்யோ.. அப்பா.. முடியலை.

பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். டெக்னாலஜி எவ்வளவோ உயர்ந்திருக்கும் காலத்தில் இவ்வளவு அரத பழசான டபுள் ஆக்‌ஷன் டெக்னிக்குகள் படு அமெச்சூர்தனம். ஜீன்ஸ் காலத்திலேயே இதை விட பிரமாதமான காட்சியமைப்புகளில் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். முக்கியமாய் இரு ஜீவாக்களில் லுக்குகளில் அநியாயமான ஆங்கிள் வித்யாசங்கள்எழுதி இயக்கியவர் சாய்ரமணி. ஒரே உருவமுள்ள இரண்டு முரணான கேரக்டர்கள், அதிலும் அண்ணன், தம்பி என்று வைத்துக் கொண்டு அட்டகாசமான படத்தை அளித்திருக்க முடியும். அதற்கான எல்லா முஸ்தீப்புகளுள்ள கதையில் திரைக்கதை சொதப்பலினால் வீழ்ந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அதிலும் இரண்டேமுக்கால் மணி நேரம் ஓடும் படம் நிறைய இடங்களில் கொட்டாவி விட வைக்கிறது. முதல் பாதி செட்டில் ஆவதற்கே இடைவேளை வந்துவிடுகிறது. நிறைய டபுள் மீனிங், ஸ்ட்ரெயிட் மீனீங், வசனங்கள் ஒரு சாராரை திருப்திப் படுத்தும். இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பான திரைக்கதையமைத்திருந்தால் நிச்சயம் ஒரு பரபரப்பான படமாய் அமைந்திருக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...