ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர்
அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது
பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.
தனது
பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில
எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை
விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் “பேஷ்புக்” இணைய
தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி
எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு
உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு
ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள்
உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை
விட 64 மடங்கு பெரியது.
No comments:
Post a Comment