ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு , மானிய
விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும்' என,
பார்லிமென்ட் நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சமையல்
காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும், மானியத்தை குறைக்க, மத்திய அரசு
தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சமையல் காஸ் விற்பனை மூலம் ஏற்பட்ட
இழப்பை சரிக்கட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கூட்டணி
கட்சிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக தள்ளிவைத்து வந்தன. சமையல்
காஸ் சிலிண்டர் ஒன்றின் அடக்கவிலை 642.35 ரூபாயாக உள்ளது. இது ஒவ்வொரு
நகரத்திற்கும் உள்ளூர் வரிக்கு ஏற்ப வேறுபடுகிறது. சென்னையில் சிலிண்டர்
விலை, 405 ரூபாயாக உள்ளது. இதில், மானியமாக, 242 ரூபாய் அளிக்கப்படுகிறது.
இந்த மான்யத்தை முற்றிலும் நீக்கும் வகையில், படிப்படியாக நடவடிக்கைகளை
மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதை அரசு ஏற்கும் பட்சத்தில், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள், காஸ் சிலிண்டருக்கான சந்தை விலையை ( ரூ.642) முழுமையாக செலுத்த வேண்டும். இதன்மூலம், அரசு வழங்கிவரும் மான்யத்தால் ஏற்படும் இழப்பை ஓரளவு சரிக்கட்ட முடியும். வசதி படைத்தவர்கள், முழு விலையை செலுத்த முன்வரும்போது, கிராமப்புறங்களில் மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை விரிவுபடுத்த முடியும் என்று பார்லிமென்ட் குழு தன் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இதில், வீடுகளுக்கான, மானிய விலை காஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு நான்கு மட்டுமே வழங்குவது என, முடிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் தள்ளிப்போனதால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது பார்லிமென்ட் நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையைத் தொடர்ந்து, விரைவில் அமைச்சர்கள் குழு கூடி, இதற்கான முடிவை எடுக்க உள்ளது.

No comments:
Post a Comment