அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் (எய்ம்ஸ்) மீது
புதன்கிழமை சிபிஐ 4 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. விடைத்தாள் திருத்தம்,
நுழைவுத் தேர்வு முடிவு, முதுகலைப் படிப்பில் மூன்று புதிய படிப்புகள் தொடர்பாக
இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2010-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதுகலை தேர்வு தொடர்பாக 7 மாணவர்களின் விடைத்தாள் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் எம்டி மற்றும் எம்எஸ் படிப்புகளுக்கு வேறு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. இதற்காக விடைத்தாளில் திருத்தம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு முடிவுகள் மூலம் பிற மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெறலாம். இதேபோல இளங்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்தும் சிபிஐ மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தவிர 2010-ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2011-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதுகலை தேர்வுகள் தொடர்பாகவும் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 2010-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்வில் 8 மாணவர்களின் விடைத் தாள்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது.2011-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் நான்கு மாணவர்களின் விடைத்தாளில் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக கடந்த ஜூன் 2-ல் எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகத்தின் முதுநிலை நுழைவுத் தேர்வில் தில்லுமுல்லு நடந்தது குறித்து மே 8-ம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment