இலங்கையின் வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடிக்கும் பணிகளை இரவோடு இரவாக செய்து வருகின்றனர் ராணுவத்தினர். இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு, கடந்த இரு வருடங்களாக சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது. தமிழர் மட்டுமின்றி, சிங்களவரும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர். ஆனால் இந்த வீட்டை இடிக்கும் பணியில் ராணுவத்தினர் முனைப்பு காட்டினர். ஒருப பகுதியை முன்பே இடித்துவிட்ட ராணுவத்தினர், இப்போது மிச்சமிருக்கும் கட்டடம் முழுவதையும் இடித்து வருகிறார்களாம். பகலில் செய்யாமல், இரவு நேரத்தில் இந்த கட்டடத்தை இடித்துத் தள்ளுவதாக தெரிய வந்துள்ளது.
டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் இதுகுறித்துக் கூறுகையில், "பிரபாகரன் வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் புல்டோஸர், ஜேசிபி போன்ற பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரவோடு இரவாக இந்த வேலையை படையினர் செய்து வருகின்றனர்," என்றார்.
No comments:
Post a Comment