|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டது ஏன்?

பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோடு தென்றல் இல்லம் என்ற இடத்தை சேர்ந்தவர் ராமசாமி, இவர் ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா ஈரோடு மாநகராட்சி மேயர் குமார்முருகேஷ், ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஓ.சி. விஸ்வநாதன், இவரது மகன் ராஜேந்திரன்,என்.கே.கே.பி.ராஜா கைதுக்கு காரணமான வழக்கு விபரம்: மற்றும் பெருந்துறையை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னியப்பன், தட்சணா மூர்த்தி, சிவக்குமார், செல்வராஜ், கோபிநாத், மகேஷ், ராஜா ஆகிய 12 பேர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். 
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா. கடந்த தி.மு.க. ஆட்சியில் இவர் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார்.  



இவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். என்.கே.கே.பி.ராஜா மீது 120 பி. (கூட்டுசதி), 470, 455, 458, 471 (மோசடி), 385 (போலி ஆவணம் தயாரித்தது), 3(1) (சொத்து அழிப்பு இழப்பீடு செய்தல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ந.ராஜா,  வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதால் என்.கே.பி. ராஜா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

அம்மனுவில்,   ‘’பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோட்டில் எனக்கு 6.60 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு கடலை மில் நடத்தி வந்தேன். இதன் அருகே எனது மகன் இளங்கோ, மருமகள் உமையவள்ளி ஆகியோர் பள்ளிக்கூடம் நடத்தி வந்தனர். எனது வியாபாரத்துக்காக கடந்த 1992-ம் ஆண்டு பால சுப்பிரமணியம் என்பவரிம் ரூ. 6 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தேன்.

பிறகு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சரியாக வட்டி கொடுக்க முடியவில்லை. இதனால் அசல் வட்டி, கூட்டு வட்டி, அபராத வட்டி கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ. 77 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி, எனது நிலத்தை கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி மிரட்டி எழுதி வாங்கி கொண்டனர்.

இதன்பிறகு 2007-ம் ஆண்டு பெருந்துறையை சேர்ந்த ஓ.சி. விஸ்வநாதன், சிவக்குமார், பால சுப்பிரமணியம், தட்சணா மூர்த்தி, மகேஷ், ராஜா கோபிநாத், ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் தனது நிலத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த 80 தென்னை மரங்களை வெட்டியும், புல்டோசர் மூலம் 2 ஏக்கர் நிலத்தை நிரவியும் சேதப்படுத்தி விட்டனர்.

இதன்பிறகு கவுந்தப்பாடியில் உள்ள என்.கே.கே.பி. ராஜா வீட்டில் வைத்து எனது குடும்பத்தை மிரட்டினார். 
பிறகு பெருந்துறை பயணியர் தங்கும் விடுதியில் என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டி வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கி கொண்டனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...