சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். செளஹான் ஆகியோர் முன்பு வந்தது.எதிர்தரப்பு வாதங்கள் மீது பதில் அளித்து வாதாடிய தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர், பி.பி. ராவ், சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல் படுத்த முடியாததற்கான காரணங்களை விளக்கினார்.சமச்சீர் பாடப் புத்தகங்களில் உரிய மாற்றங்களை செய்து அடுத்த ஆண்டு அல்லது வரும் ஆண்டுகளில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். தமிழக அரசின் சார்பில் பதில் விளக்கம் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
மேலும், சமச்சீர் கல்வி புத்தகங்களை ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் பள்ளி, மாணவ, மாணவியர்களிடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.1 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனு மீது 6 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
No comments:
Post a Comment