மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து அன்னா ஹசாரே பேராட்டம் நடத்தினார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட லோக்பால் மசோதா, பார்லிமென்டில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு தயாரித்துள்ள இம்மசோதா சட்ட வரம்பில், பிரதமர் பதவி வகிப்போருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடுமையான சட்டதிட்டங்கள் இல்லாத, நீர்த்துப்போன இம்மசோதாவால் ஊழலை ஒழிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இன்று டில்லியில் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் அரசு தயாரித்த லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதா நகல் எரித்து போராட்டம் நடத்தினர்.
பா.ஜ., எதிர்ப்பு: மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதா சட்டவரம்புக்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்திற்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.
No comments:
Post a Comment