பயனற்றவர்களை எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம்என அன்னா ஹசாரே பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார். வலுவான லோக்பாலை வலியுறுத்தி 12வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் கூடியுள்ள ஆதரவாளர்கள் மத்தியில் 2வது முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது எம்.பி.,க்களாக இருப்பவர்களில் 150 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களை போன்ற பயனற்றவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது. எம்.பி.,க்கள் மீது மக்கள் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதில்லை. எனவே நாடு முழுவதும் சென்று அவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என கேட்டு கொள்ள இருப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment