உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது,' என மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தான கருத்தரங்கில் சென்னை மருத்துவ கல்லூரி டாக்டர் அமலோற்பவநாதன் தெரிவித்தார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்தியாவில் பீகார், ம.பி., உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களை விட தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெற்றுள்ளது. உடல் உறுப்புதானமும் எளிதாக நடக்கிறது. வளரும் நாடுகளில் தமிழகம் உடல் உறுப்புதானத்தில் முதலிடம் வகிக்கிறது. இரு ஆண்டுகளில் 205 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். நோயாளி மூளைச்சாவு அடைந்ததை உறுதிப்படுத்த 4 டாக்டர்கள் குழு தேவை. இக்குழு சட்டரீதியாக உறுதிப்படுத்திய பின்பே தானம் செய்ய நோயாளியின் உறவினர்கள் முன்வரலாம், என்றார். போக்குவரத்து உதவி கமிஷனர் மகுடபதி பேசுகையில், ""இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது நொடியில் விபத்து நடக்கிறது. பல்வேறு நினைவுகள், மனஉளைச்சலுடன் செல்லும்போதுதான் விபத்து நிகழ்கிறது. உறுப்புதானத்திற்கு போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வருவோம்,'' என்றார்.
No comments:
Post a Comment