|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 August, 2011

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்!

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக,'' பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் தெரிவித்தார். 

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக நடந்த "தேசிய ஆற்றல் சேமிப்பு, மரபுசாரா எரிசக்தி தொழில் நுட்பம்' குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலகில் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. எண்ணெய் வளங்கள் மூலம் கிடைக்கும் சக்தி, 125 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின், வரும் தலைமுறைகளுக்கு சக்திகளை உருவாக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவில் புதுப்பிக்க கூடிய ஆற்றல் வளங்கள், 1980 ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ஆற்றல்கள் அனைத்தும், சூரியனின் வெப்ப சக்தியிலிருந்து தான் பெறப்படுகின்றன. 

இதில் சீனா, உலகில் முதலிடம் வகிக்கிறது. காற்றாலைகளில் இருந்து மின் உற்பத்தி செய்வதில், இந்தியா 5 ம் இடத்தையும், இந்தியாவில் தமிழகம் முதலிடத்தையும் பெற்றுள்ளது. காற்றாலைகள் தென் மாவட்டங்களில் அதிகளவில் செயல்படுகின்றன. ஒரு காற்றாலை அமைக்க ரூ. 4 கோடி முதல் 10 கோடி வரை செலவாகிறது. காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, அரசும் ஊக்கப்படுத்துகின்றன. மனித வாழ்க்கையில் புதுப்பிக்க தக்க ஆற்றல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கை சூழலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆற்றல்களை பெருக்க முன் வர வேண்டும், என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...