ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் போது, சிறந்த வெளிநாட்டு
படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து ஒரு படம் தேர்வு
செய்யப்படும். எடிட்டர் பி.லெனினைத் தலைவராகக் கொண்ட 14 பேர் கொண்ட குழு
இந்தியாவிலிருந்து, இந்த ஆண்டு அனுப்பப்படும் படத்தைத் தேர்வு செய்ய
நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கங்கை அமரன்,
ஏ.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தியாவின்
பல்வேறு மொழி படங்களில், தமிழில் இருந்து தெய்வத்திருமகள், கோ, ஆடுகளம்
உள்ளிட்ட ஐந்து படங்களுடன் மொத்தம் 16 படங்கள் பரிசீலிக்கப்பட்டது.
இறுதியில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான, "ஆதாமிண்டே மகன் அபு"
படம் தேர்வானது. சலிம் அகமது இயக்கியிருந்த இந்தபடத்தில் ஹீரோவாக சலிம்
குமார் நடித்து இருந்தார். மாநில விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது
உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment