|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு!


போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இலங்கையை சேர்ந்த தமிழர் அருணாசலம் ஜெகதீஸ்வரன். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இவர் ஜெகன்வரன் என அழைக்கப்படுகிறார். இவர் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது தனது வக்கீல் லூசியன் ரிக்டர் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அதில், கடந்த 2007 பிப்ரவரி முதல் 2009 மே மாதம் வரை இலங்கையில் பணிபரிந்தேன். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், முகாம்கள் மற்றும் அனாதை இல்லங்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுக்ள வீசப்பட்டன.
 
எனவே லட்சக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அந்த படுகொலைகளை நான் நேரில் பார்த்தேன். இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதன் மூலம் ராஜபக்சே போர்க்குற்றம் புரிந்துள்ளார்.இலங்கை ராணுவத்தின் முப்படைக்கும் தலைவராக அதிபர் ராஜபக்சே உள்ளார். எனவே இதுகுறித்து அவர் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என கூறியுள்ளார்.
 
இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் வருகிற நவம்பர் 29-ந் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு வருவதாக மெல்போர்ன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அறிவித்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வருகை தர உள்ளார். எனவே அவரிடம் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தன் மீது கூறப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை இலங்கை அதிபர் ராஜபக்சே மறுத்துள்ளார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...