கிங்ஃபிஷர் விமான நிறுவன குளறுபடி காரணமாக விஜய் மல்லையாவின் யுபி குழுமம் ரூ 21800 கோடியை (4 பில்லியன் டாலர்கள்) இழந்துள்ளது. யுபி குழுமத்தைச் சேர்ந்த கிங்பிஷர், யுபி ஹோல்டிங்ஸ், யுனைடட் ப்ரூவரிஸ், யுனைடட் ஸ்பிரிட்ஸ், மங்களூர் கெமிகல்ஸ் மற்றும் பெர்டிலைஸர்ஸ் லிமிடட் மற்றும் யுபி எஞ்ஜினீயரிங் ஆகிய 6 நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிந்துவிட்டதால், இந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது மல்லையாவின் நிறுவனம்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமான இயக்கு செயலவுகள் அதிகரித்துவிட்டதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதைச் சரிகட்ட, கடன் அளவை உயர்த்தித் தருமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டது கிங்ஃபிஷர். ஆனால் வங்கிகள் இதற்கு மறுத்துவிட்ட நிலையில் அரசு உதவியை நாடியுள்ளது. ஆனால் அரசு உதவக் கூடாது என எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கிங்ஃபிஷரின் இந்த வீழ்ச்சி, விஜய் மல்லையாவின் மற்ற நிறுவனப் பங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில தினங்களாக யுபி குழுமத்தின் அனைத்து நிறுவனப் பங்குகள் விலையும் வீழ்ச்சியடைந்துவிட்டன. இதில் யுபி குழும பங்குகளை வைத்துள்ள புரமோட்டர்களுக்கு மட்டும் 50 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment