கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் பட்டினியால் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் 23,000 குழந்தைகள் தான் இறந்துள்ளனர் என்கிறது மாநில அரசு. இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்ட நேரத்தில் குழந்தைகளைப் பற்றிய சில அதிர்ச்சகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2005-2009ல் நாள் ஒன்றுக்கு 83 குழந்தைகள் இறந்துள்ளன. 2009ல் மொத்த குழந்தைகளில் 60 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000 குழந்தைகளில் 70 குழந்தைகள் 1 வயதை அடைவதற்கு முன்பு இறந்துள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடியின குழந்தைகள் பலர் பசிக்கு பலியாகின்றனர். ஒரு புறம் தானியங்கள் அரசுக் கிடங்குகளில் மக்கிப் போக, மறுபுறம் ஏழைக் குழந்தைகள் உண்ண உணவின்றி பசியால் இறக்கின்றனர்.ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஹாரியா பழங்குடியின மக்களின் குழந்தைகள் பலர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பட்டினியால் வாடி இறந்து கொண்டிருக்கையில் மாநில அரசு இது குறித்து பாராமுகமாகவே இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். ஆனால் 23,000 குழந்தைகள் தான் இறந்துள்ளனர் என்கிறது மாநில அரசு.
No comments:
Post a Comment