|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

பிரபல பாடகர் கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன!


கர்நாடக இசை மேதையும் பிரபல பின்னணிப் பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். திரைப்படத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக போற்றப்படுகிறது. எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ அந்த நிமிடங்களில் மனம் நனைந்து கரைந்து உருகும் அதிசய அனுபவத்தைப் பெறுகிறோம். மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே. எதிரியே பாடினாலும் நின்று கேட்க வைக்கும் அபார சக்தி இசைக்கு மட்டுமே சொந்தம். அந்நிய மொழிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தெய்வீக குரலுடைய கே.ஜே. யேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்து பாடல்களுமே கேட்கக் கேட்க திகட்டாதவை.

50 ஆண்டுகள் சாதனை: கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி. பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துலு, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட 14 மொழிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.

விருதுக்கு விருது: தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் மத்திய அரசின் விருது பெற்றுள்ளார். திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார். இவரது புகழினை பரப்பும் வகையில் இவரது இளையமகன் விஜய் யேசுதாஸ் புகழ்பெற்ற பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...