20 மாநிலங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட சாதிகளை ஒ.பி.சி.,பட்டியலில் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேசிய கமிஷனின் பிற்படுத்தப்பட்ட பிரிவு தெரிவித்திருப்பதாவது: ஆந்திரா, அசாம் , பீகார், சட்டீஸ்கர், கோவா, இமாச்சல் பிரதேசம்,
ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா,
சி்க்கிம், தமிழ்நாடு, உத்தரகண்ட், மேற்குவங்காளம், மற்றும் யூனியன்
பிரதேசங்களான அந்தமான்நிக்கேபார் தீவுகள், சண்டிகர்,புதுடில்லி,
பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட சாதிகளை
ஒ.பி.சி.பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள
செய்திகுறி்ப்பில் தெரிவித்துள்ளது. இதில் கோவா, உத்தரகண்ட், ஆகிய
மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment