ராமநாதபுர நகராட்சி நிர்வாகத்தினர், கச்சா எண்ணெயில், மரத்துகள்கள், பழைய
துணிகளை ஒரு நாள் ஊற வைக்கின்றனர். இந்த கலவையுடன், துணியை பந்துபோல்
சுருட்டி, பயன்படுத்தாத குட்டைகள், சாக்கடைகள், கழிவு நீர்த் தேக்கங்களில்
போடுகின்றனர். இதிலிருக்கும் எண்ணெய், தண்ணீரில் மிதப்பதன் மூலம்,
கொசுக்களின் ஆரம்ப நிலையான லார்வா, மூச்சுச் திணறி இறந்து விடும். இதன்
மூலம், கொசு உற்பத்தியைத் தடுக்க முடிவதால், நகராட்சிகளில் இம்முறையைப்
பின்பற்றத் துவங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment