வாஷிங்டன் மாகாண தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த பரத்
ஷ்யாம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி ஏற்ற பிறகு,
அந்நாட்டின் முக்கிய பொறுப்புகளில், இந்தியர்கள் பலர் நியமிக்கப்பட்டு
வருகின்றனர். இந்த வகையில், தற்போது வாஷிங்டன் மாகாண தலைமை தகவல் தொடர்பு
அதிகாரியாக, பரத் ஷ்யாம் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை ஐ.ஐ.டி.,யில்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர் ஷ்யாம். அதன் பின், அவர்
"ஸ்டேன்போர்ட்' பல்கலைக்கழகத்தில், 93ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்சில்
முதுகலை பட்டம் பெற்றார். சாப்ட்வேர் டிசைன் இன்ஜினியராக பணியை துவக்கிய
ஷ்யாம், ஸ்மார்ட்போனை வடிவமைத்தார். இன்டெர்நெட் எக்ஸ்புளோரர், வின்டோஸ்
98, 2000, "எக்ஸ்பாக்ஸ் லைவ்' உள்ளிட்ட பல சாப்ட்வேர் வடிவமைப்பில், இவர்
முக்கிய பங்காற்றியவர். வின்டோஸ் அஷ்யூர் என்ற நிறுவனத்தின் பொது
மேலாளராகப் பணியாற்றி வந்த ஷ்யாம், சாப்ட்வேர் வெளியீடுகளைக் குறைந்த
செலவில் வெளிவரச் செய்தார். இவரது செயல்பாடுகளில் கவரப்பட்ட வாஷிங்டன்
மாகாண கவர்னர், ஷ்யாமுக்கு தலைமை தகவல் தொடர்பு அதிகாரி பதவியை
அளித்துள்ளார்.
No comments:
Post a Comment