மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் மூலம் இளநிலை உதவியாளர், உதவி சேமிப்பு கிடங்கு மேலாளர் பணியிடங்களுக்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டன. இளம் அறிவியலில் வேதியியல், தாவரவியல், விலங்கியலை முதல் பாடமாகவோ, துணைப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும். 01.10.11 அன்று, பகிரங்க போட்டியாளர், 30 வயதிற்குள், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் 32 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பொதுப்பிரிவு, மிக பிற்பட்டோர், பகிரங்க போட்டியாளர் பிரிவில், 01.11.2011 வரை பதிவு செய்த ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம் புரிந்தோர், சுதந்திரப் போராட்ட தியாகியின் நேரடி வாரிசு, மொழிப்போர் தியாகியின் வாரிசு. ஆதிதிராவிடர் பொதுப்பிரிவு, பகிரங்க போட்டியாளர் பிரிவுக்கு 9.9.2005 வரையும், மிகவும் பிற்பட்டோர் பிரிவில் 30.6.2006 வரை பதிந்துள்ள முன்னாள் ராணுவத்தினர், அவரைச் சார்ந்தவர்கள்.முன்னுரிமை இல்லாதவர் பிரிவில், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பெண்கள் பிரிவுக்கு 28.12.2004, ஆதிதிராவிடர் பொதுவானவர்கள் 9.3.2001, மிகவும் பிற்பட்டோர் 17.9.2003, பிற்பட்டோர் (முஸ்லிம்) 5.7.2001, பிற்பட்டோர் 5.12.2000, பகிரங்கப் போட்டியாளர் 8.,8.2001 வரை பதிவு மூப்பு செய்திருக்க வேண்டும்.கல்வித்தகுதி, வயது, பதிவுமூப்புள்ளவர்கள் மட்டும் இன்றும், நாளையும்(நவ.,9,10) காலை 11 மணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் அணுகலாம், என தெரிவித்து உள்ளார்.முகவரி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப், புதூர், மதுரை - 625 007.
No comments:
Post a Comment