|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

அமர்த்தியா சென் சாதனையை சமன் செய்த மாணவி!

மஹிமா கன்னா என்ற கொல்கத்தா மாணவி பொருளியல் துறையில் எம்பில் ஆய்வுப் படிப்பில் அமர்தியா சென்னின் சாதனையை சமன் செய்தார். இத் துறையில் மிக உயர்ந்த ஸ்டீவன்சன் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் மஹிமா கன்னா (வயது 23). பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதை முடித்த உடன், எம்.பில். ஆய்வு படிப்பை பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார். 2010-11-ம் கல்வி ஆண்டு எம்.பில். (பொருளியல்) ஆய்வு படிப்பு மாணவ- மாணவிகளில் உயர் ரேங்கில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, இப்பல்கலைக்கழகத்தின் கெளரவ பரிசான ஸ்டீவன்சன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை வாங்கும் மூன்றாவது இந்தியர் மஹிமா கன்னா.

நோபல் பரிசு பெற்றவரும் இந்திய பொருளாதார மேதையான அமர்தியா சென் 1956-ல் இவ்விருதை பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் இவர். அடுத்து 1967-ல் தாஸ்குப்தா என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருக்கு இந்த விருது கிடைத்தது. இப்போது மஹிமா கன்னா இந்த விருது வென்றுள்ளார். இந்த 3 பேரில் அமர்தியா சென்னும், மஹிமா கன்னாவும், பொருளாதார பாடத்தில் ஒரே பிரிவை எடுத்து ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமர்தியா சென்னின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார். மஹிமா தற்போது மும்பையில் வர்த்தக கணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தியாவிலேயே தொடர்ந்து பணிபுரிவேன் வேலைக்காக வெளி நாடு செல்ல மாட்டேன் என்று அவர் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...