கூடங்குளம் அணு உலை தொடர்பான பேச்சுவார்த்தையில், அணு உலை எதிர்ப்புக் குழுவினர், ஆவணங்களுடன் பதில் கேட்டுள்ள பல கேள்விகள், பல்வேறு ரகசிய விவரங்களை கேட்கும் வகையில் உள்ளன. இந்த விவரங்கள், எதிர்ப்பாளர்களுக்கு எதற்கு என்று திகைக்கும் போது, மேலும் குழப்பம் விளைவிக்கும் வகையில், தமிழ் மட்டுமின்றி, மலையாளம், இந்தி மொழிகளிலும் அவர்கள் பதில் கேட்டுள்ளனர். இது, அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எதிர்ப்பில் வெளிமாநில சக்திகளுக்கும் பங்கு உள்ளதா? இத்தகைய ஆவணங்களை தர முடியாது என தெரிந்து கொண்டே, போராட்டத்தை நீட்டிக்கும் வகையில் கேட்கின்றனர் என்பது உட்பட, பல கேள்விகள் எழுந்துள்ளன.
பேச்சுவார்த்தை: கடந்த இரு தினங்களுக்கு முன், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில், மத்திய நிபுணர் குழுவும், தமிழக அரசு அமைத்த குழுவிலிருந்த எதிர்ப்பாளர்களும் பேச்சு நடத்தினர். அவர்களுக்கு விழிப்புணர்வு விவரங்களை தெரிவிக்க, மத்தியக் குழுவினர் முன் வந்தனர். ஆனால், அதை ஏற்க, எதிர்ப்புக் குழுவினர் மறுத்து விட்டனர். பின், 50 கேள்விகள் அடங்கிய தொகுப்பை கொடுத்து, அதற்கு தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில், ஆவணத்துடன் பதில் கேட்டுள்ளனர்.
ஆலோசனை: இக்கேள்விகள், அணு உலையின் தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் ரகசியம் மற்றும் உயர்மட்ட அளவிலான ஒப்பந்தங்களை உள்ளடக்கியுள்ளதாக இருப்பதால், அதுகுறித்த ஆவண விவரங்களை தர முடியுமா என்பது குறித்து, அணுசக்தி கழக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அணு உலையின் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் பெரும்பாலும், அணு உலை கட்டுமான நிறுவனங்களுக்கும், அணு சக்தி நிறுவனங்களுக்கு மட்டுமே தேவைப்படும். இந்த விவரங்கள், சாதாரண மக்களுக்கு எந்த பதிலையும் தரப்போவதில்லை.
புதிர்: ஆனால், "அணு உலையே வேண்டாம்,' என, திட்டவட்டமாக கூறும், அணு உலை எதிர்ப்பாளர் குழுவுக்கு, இந்த விவரங்கள் ஏன் தேவை என்ற கேள்வி, அணுசக்தி வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கிடையே, எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாக, வரும் 15, 16, 17ம் தேதிகளில், கூடங்குளம் அணு உலைக்கு, மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.
எதிர்ப்பாளர்களின் கேள்விகள்
நாட்டின் பாதுகாப்பு, ரகசிய விவரங்கள் சார்ந்த கேள்விகள்
1. அணு உலை அமைந்துள்ள இடம்
2. அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்
3. அணு உலையின் செயல்திறன் அறிக்கை
4. எரிபொருள் நிரப்புவது எப்படி?
5. யுரேனிய எரிபொருள் வாங்கும் முறை; எங்கிருந்து வாங்கப்படுகிறது
6. எரிபொருட்களை கொண்டு வரும் பாதைகள் மற்றும் போக்குவரத்து குறித்த விவரம்
7. தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது. அதன் பாதைகள் குறித்த விவரம்
8. அணு கழிவுகள் அகற்றுதல் மற்றும் கையாளும் தொழில்நுட்பம்
9. அணு மறு சுழற்சி குறித்த விவரம்
10. அணு மறு சுழற்சி நிலையம் குறித்த விவரம்
11. குளிர்நீர் வெளியேற்றும் தொழில்நுட்பம்
12. மன்னார் வளைகுடா பகுதிக்கான பாதுகாப்பு
13.மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கான பாதுகாப்பு
14.பயங்கரவாத அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கை
15. இத்திட்டத்தால், சீனா, இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான நட்புறவு மாற்றம் குறித்த விவரம்
16. எரிபொருளுக்கான கனிம சுரங்கங்கள், அதை தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள்
17. ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்
18. ராணுவ கண்காணிப்பு விவரம்
19. அணு உலையின் தொழில்நுட்ப விவரம்
மற்றும் அதற்கான மொத்த செலவு விவரம்
20. கடல் பாதுகாப்பை பலப்படுத்துவது எப்படி?
21. கடல் வழி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விவரம்
22. ராணுவம் பணியமர்த்தப்படும் பகுதிகள் எவை?
23. மீதமுள்ள நான்கு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்த விவரம்
24. அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடையேயான ஒப்பந்த விவரம்
25. ஆயுதங்கள் தயாரிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள்
மற்ற கேள்விகள்
26. சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அறிக்கை
27. கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறிய விவரம்
28.பொது கருத்துக்கேட்பு நடத்திய விவரம்; அறிக்கை
29. கட்டுமான தரம் மற்றும் நம்பகத்தன்மை
30. கான்ட்ராக்டர்களின் செயல்பாடுகள்
31. வேலைவாய்ப்பு அளிக்கும் விவரம்
32. பேச்சிப்பாறை மற்றும் தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்தும் விவரம்
33. கடல் நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் விளைவுகள்
34. கதிரியக்க பாதுகாப்பு முறைகள்
35. அணு உலை இயக்கத்தில் வெளியேறும் மாசு குறித்த விவரம்
36. அணு உலை பகுதிகளில் மக்கள் வாழும் முறை
37. கடலியல் விவரம்
38. மீனவர்களுக்கான பாதுகாப்பு
39. நிலப்பகுதியில் மாற்றம் ஏற்படுமா?
40. இயற்கை பேரிடர் மேலாண்மை விவரம்
41. அவசர பாதுகாப்பு நடவடிக்கை விவரம்
42. மின்சாரம் உற்பத்தி மற்றும் கொண்டு செல்லும் வழி
No comments:
Post a Comment