|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

மேக நோய்களை குணமாக்கும் சீந்திற்கிழங்கு.


மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கில் மகத்துவம் தரும் மருத்துவ குணம் உண்டு. சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சீந்திற்கிழங்கு உயிர் சத்து மிக்கது. கொடி வகையைச் சேர்ந்த இந்த கிழங்கு, சீந்தில், பேய்ச்சீந்தில், பொற்சீந்தில் என பலவகையை கொண்டுள்ளது. இந்த கிழங்கு பல்வேறு நோய்களை போக்குவதால் அமிர்தக்கொடி, அமிர்தவல்லி, சோமவல்லி, குண்டலி எனவும் இதனை அழைக்கின்றனர். 

மேகநோய்களை நீக்கும் சீந்திற்கிழங்கு அஜீரணத்தைப் போக்கி பசியை தூண்டவல்லது. இது 21 வகையான மேகநோய்களையும் நீக்க வல்லது என்று மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும். பித்தம் அதிகரிப்பதினால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். ரத்த பித்தத்தைப் போக்கும். 

பேய்ச்சீந்தில் எண்ணெய்  பேய்ச்சீந்திலை ஆகாசகருடன், என்று கூறுவர். இக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்துவகை சருமநோய்களையும் போக்க வல்லது. இதனை மேல்பூச்சாக பூச குழிப்புண்களையும் ஆற்றும். இந்த எண்ணெய் கால்நடைகளின் கழுத்தில் ஏற்படும் புண்கள், கழலைகளை குணமாக்கும்.

குடல்நோய் குணமடையும் பேய்ச்சீந்திற்கிழங்கின் மேல் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். பின்பு பொடியாக்கி துணியில் சலித்து எடுத்துக்கொண்டு மருந்தாக பயன்படுத்தலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். குடல் தொடர்புடைய நோய்கள் குணமாகும். காமாலை நோய் பித்தபாண்டு ஆகியவற்றைப்போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இது கழுத்தில் வரும் கழலைக்கட்டிகளை ஆற்றும். நாள்பட்ட தோல்நோய்களை குணமாக்கும். 

பொற்சீந்தில் வற்றல் பொற்சீந்தில் பித்தம் தொடர்புடைய காய்ச்சல், வாந்தி போன்றவற்றை நீக்கும். காசநோய், நீரிழிவு போன்ற நோயால் சிரமப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாகும். இக்கிழங்கை வற்றலாக காயவைத்து உட்கொண்டால் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். நீரிழிவு மற்றும் காசநோய் குணமாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...