|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்படம் - செங்கடல்!

கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் - 24 படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் தமிழில் ஒரே ஒரு படம் தான். (மலையாளப்படங்கள்-7, மராத்தி - 3, வங்காளம்-4, இந்தி-3, கன்னடம், போஜ்பூரி, அஸ்ஸாமிஸ், கொங்கனி, தமிழ், தெலுங்கு-தலா ஒன்று) நவம்பர் 30 தேதி இரவு பத்து மணிக்கு,  ஐநாக்ஸ் - 2 திரை அரங்கில் "செங்கடல் படம் திரையிடப்பட்டது.  "இப்போ எம்.ஜி.ஆர். இருந்தால் ஸ்ரீலங்கா காரங்க இந்த ஆட்டம் ஆடுவாங்களா, மற்றும் சில வசனங்களுக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல். மீடியாக்காரர்களுடன் இந்தப் படத்தின் இயக்குனர் ""லீனா மணிமேகலையின் சந்திப்பு இன்று நடந்தது. ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஏராளமான அகதிகள் படும் துயரங்களையும், ஆயிரக்கணக்கில் இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா கப்பற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதையும், வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்தப்படம்.  முதல் முறை சென்சாருக்கு சென்ரல் போர்டு ஆஃப் பிலீம் சர்டிபிகேஷன் படத்தை காண்பித்தபோது படத்தை நிராகரித்துவிட்டார்கள். இந்தியா, ஸ்ரீலங்கா அரசுகளின் செயல்பாடுகள் குறித்து காட்சிகள், இந்திய-ஸ்ரீலங்கா நல்லூறவில் பாதிக்கக்கூடும் என்றும் படத்தில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் மீனவர்கள் பேசும் சில வசனங்கள் ஆபாசமாக இருக்கின்றன என்பது காரணங்கள். அதை எதிர்த்து அப்பெல்லட் ட்ரிபியூனலுக்கு மேல் முறையீடு செய்தேன். பிறகு படத்தை வேறு கமிட்டி பார்த்து, எந்தவித "கட்  "இதt"   வெட்டுக்கள் இல்லாமல் அடல்ஸ்ட் ஒன்லி (அ) சர்டிபிகேட் கொடுத்தார்கள். 2011 ஜூலை 2ம்தேதி சென்சார் சர்டிபிகேட் - இந்தியாவில் திரையிட, வெளிநாடுகளுக்கு படத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்தது.  கோவா திரைப்பட விழாவில் செங்கடல் படத்தை இந்திய பனோரமாவில் திரையிட, தேர்வு செய்ததற்கு, நடுவர் குழுவின் தலைவர் பிரபல இயக்குனர் சாய் பரஞ்சபே மற்றும் ஜுறி குழுவினருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 32வது டர்பன் சர்வதேச திரைப்பட விழா, 35வது உலக மான்ட்ரீல் திரைப்படவிழா, 13வது சர்வதேச பம்பாய் திரைப்பட விழா, இந்தப்படம் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தன் சொந்தப் பணத்திலும், உறவினர்கள் (கடைசி தங்கை உள்பட) நண்பர்களிடமும் உதவிபெற்றுத் தன் படத்தை, பல சிரமங்களுக்கு நடுவே எடுத்து முடித்தேன் என்கிறார்.  ராமேஸ்வரத்திலிருந்து - 45 நிமிட பயணத்தில் உள்ள கிடாத்திருக்கை என்ற இடத்தில் உள்ள பல தெருகூத்து கலைஞர்களை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். படம் முழுவதும் படப்பிடிப்பிலே சவுண்ட், வசனங்கள், பதிவு செய்தோம். டப்பிங் தியேட்டருக்கு செல்லவில்லை என்கிறார்.  டோக்கியோ திரைப்படவிழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் விருதை, இந்தப்படம் பெற்றிருக்கிறது. அடுத்த மார்ச்சில் (மார்ச்-2012) நடைபெறவுள்ள சர்வதேச மீனவர்கள் திரைப்பட விழாவில், முதல்படமாக செங்கடல் தேர்வு செய்யப்பட்டியிருக்கிறது. இந்தப் படத்தின் பாதிப்பால், ஒரு மீனவர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, என் முயற்சி பயனுள்ளதாக ஆகிவிடும் என்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...