2005ம் ஆண்டு தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்ற புதுக் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். மதுரையில் அன்று தொடங்கிய தேமுதிக, அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்தாலும் வாக்கு வங்கியைப் பிரிக்கும் கட்சியாகவே திகழ்ந்து வந்தது. தனது கட்சிக் கொள்கைகளில் ஒன்றாக தனித்து போட்டியிடுவோம் என்பதையும் அறிவித்தார் விஜயகாந்த். இதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர். இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம் என்று நக்கலடித்தனர். ஆனாலும் தொடர்ந்து தனியாகவே போட்டியிட ஆரம்பித்தார் விஜயகாந்த்.
2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் தனிததுப் போட்டியிட்டு கிட்டத்தட்ட 7 சதவீத்திற்கும் ��ேலான வாக்குகளை அவரது கட்சி பெற்றது. அதிமுக வேட்பாளர்கள் பலர் தோற்க தேமுதிக காரணமாக அமைந்தது. மேலும் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அவர் மட்டுமே அத்தேர்தலில் வென்றாலும் கூட தேமுதிகவின் வாக்குப் பிரிப்பு இருபெரும் திராவிடக் கட்சிகளான அதிமுகவுக்கு அதிக பாதிப்பையும், திமுகவுக்கு லேசான பாதிப்பையும் ஏற்படுத்தியது புதிய வெளிச்சத்தை இவர் பக்கம் திருப்பியது. தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தலிலும் விஜயகாந்த் கணிசமான வாக்குகளை தனியாகப் போட்டியிட்டு அள்ளினார். இதனால் விஜயகாந்த்தின் புகழ் மேலும் கூடியது. ஆனால் எவ்வளவுதான் முக்கினாலும் தேமுதிகவை பெரிய கட்சியாக மாற்ற முடியவில்லை. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்ததால் இந்த நிலை. இதை தொண்டர்களும் உணர்ந்தனர், விஜயகாந்த்தும் உணர்ந்தார்.இதனால் கட்சியைக் காக்கவும், அதற்கு அங்கீகாரம் பெறவும் கூட்டணி அரசியலுக்குத் தாவும் முடிவுக்கு வந்தார் விஜயகாந்த்.
சில பல இழுபறிகளுக்குப் பின்னர் அவர் அதிமுகவுடன் போய்ச் சேர்ந்தார். 2011 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது தேமுதிக. முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவரானார் திமுகவையே 3வது இடத்திற்குத் தள்ளினார் விஜயகாந்த் - அதிமுகவின் அசாத்திய செல்வாக்குடன் சேர்ந்த காரணத்தால். இந்த ஆண்டில்தான் அவரது கட்சி தமிழகத்தின் 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார், எனவே விஜயகாந்த்தின் அரசியல் வரலாற்றில் 2011ம் ஆண்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு
No comments:
Post a Comment