பிரான்ஸ்சில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியிடடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலரான கார்த்திகைப் பூ, புலிக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட 4 வகையான தபால் தலை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவற்றைப் பயன்படுத்தி தங்களது தபால்கள் மற்றும் சரக்குகளை தமிழர்கள் அனுப்ப முடியும் என தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் வாழ் சிங்கள மக்கள் மற்றும் இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் தூதரகம் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் சின்னங்களைக் கொண்ட தபால் தலைகள் வெளியானது குறித்து எங்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அஞ்சல்துறை லபோஸ்ட் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment