திருநள்ளாறை சேர்ந்த முனைவர் சோமசுந்தரம் முருகேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் முனைவர் சோமசுந்தரம் முருகேசன், புதுச்சேரி கல்வித்துறையில் பிரெஞ்சுக் கல்வித்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிரெஞ்சு மொழிக் கல்வி குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பிரெஞ்சு மொழி புத்தகங்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையுடைய இவருக்கு, பிரான்ஸ் நாட்டு கல்வித்துறையால் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது கிடைத்தது குறித்து சோமசுந்தரம் முருகேசன் புதன்கிழமை கூறும்போது பிரெஞ்சு மொழியை பரப்பியது, பல்வேறு பிரெஞ்சு புத்ததகங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது, பிரெஞ்சுக் கல்விக்கு ஆற்றிய பணியை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது தமக்கு தரப்பட்டுள்ளது. விருதுக்கான மெடல் புதுச்சேரி பிரான்ஸ் கவுன்சில் மூலம் அடுத்த 10 நாள்களில் தமக்கு கிடைத்துவிடுமென தெரிவித்தார்
No comments:
Post a Comment