ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை என்று ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரியும், குப்பம் பல்கலைக்கழக துணை வேந்தருமான சுசி செல்லப்பா கூறினார்.தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் ஐஏஎஸ்., ஐபிஎஸ் தேர்வு எழுதுவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியை ரோசி வரவேற்றார். பாரத் கல்விக்குழு செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். ஆந்திர மாநிலம் குப்பம் பல்கலைக்கழக துணை வேந்தரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுசி செல்லப்பா முகாமில்,பல மாணவர்கள் படி த்து முடித்தவுடன் வேலை கிடைக்காமல் மனதில் கேள்விக்குறியை சுமந்துகொண்டு காலத்தை கடத்துகின்றனர்.போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைப்பது கடினம்தான். ஆனால், எந்த ஒரு விஷயத்திலும் தீவிர முயற்சி எடுத்து மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.’’
இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு மொழி ஒரு தடையாக இருப்பதாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும் என பல மாணவர்கள் தவறாக நினைக்கின்றனர். ஆனால், இப்போது தமிழிலும் இத்தேர்வை எழுத முடியும். நான் ஆங்கிலத்தில் படித்து பட்டம் பெற்றேன். ஆனால், தமிழில்தான் ஆட்சிப்பணி தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பல்வேறு இடங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பின் தற்போது பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வருகிறேன். எனவே ஆட்சிப்பணி தேர்வுக்கு மொழி ஒரு தடையல்ல. உள்ளத்தில் உறுதி, மனதில் திடத்துடன் செயலாற்றினால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment