விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாள் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா, சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் கூவாகம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். இன்று மகாபாரத நிகழ்ச்சி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம், மே 1&ம் தேதி மாலை நடக்கிறது.
அன்று தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் திரளுவர். அவர்கள் தங்களை மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு, கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்வர். இரவு முழுவதும் கூத்தாண்டவரின் பெருமைகளை சொல்லி கும்மி அடித்து, ஆடிப்பாடி மகிழ்வர்.மறுநாள் காலை அரவான் தேரோட்டம் நடக்கும். அரவான் கள பலி நிகழ்ச்சி முடிந்ததும் திருநங்கைகள் தாலியை அறுத்துவிட்டு ஒப்பாரி வைத்து அழுது புலம்புவர். பின்னர் அங்கேயே நீராடி வெள்ளை ஆடை உடுத்தி சொந்த ஊர் திரும்புவர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment