நாட்டில் ஊழல் மற்றும் முறைகேடு என சிக்குபவர்களை குறி வைத்து பிடித்து முறையான விசாரணை நடத்தி, சிறைக்குள் தள்ளிவரும் நம்பத்தகுந்த , இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையை மேலோங்க செய்து வரும் சி.பி.ஐ., துறையிலும் 2 டஜன் கறுப்பு ஆடுகள் இருப்பதாக லிஸ்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உள்கட்டமைப்பு விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது குறித்து சி.பி.ஐ.,உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த துறை மிக நேர்மையானது. இங்கு ஒழுக்ககேட்டுக்கு இடமில்லை. இருப்பினும் சில டி.எஸ்.பி., பொறுப்புக்களில் உள்ளவர்கள் நேர்மையின்மை, நம்பிக்கை துரோகம் போன்ற மனப்பாங்கில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்படி சுமார் 25 பேர் முக்கிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பவர் இல்லாத இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிகக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மீதான இறுதிகட்டத்திற்கு நீண்ட காலம் பிடிக்கும். விரைவில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோர்ட் மூலம் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் பணியில் இருந்து நீக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment