இந்த மாதத்தில் மொத்த நாள்கள் 28 தான். 23 புதுப்படங்களின் ரிலீசை சந்திக்கிறது. இது எந்த மாதத்திலும் நிகழாத சாதனை ஆகும். ஏற்னவே ‘கடல்’, ‘டேவிட்’, படங்கள் கடந்த 1-ந்தேதி ரிலீசாகி ஒடிக் கொண்டிருக்கின்றன. நாளை (7ந்தேதி) கமலின் ‘விஸ்வரூபம்’ ரிலீசாகிறது. இதில் நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடத்துள்ளனர். ரூ.90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. 8-ந்தேதி ‘சுடச்சுட’, ‘நினைவோடு கலந்துவிடு’, ‘அறியாதவன் புரியாதவன்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீசாகின்றன. வருகிற 14-ந்தேதி ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘நேசம் நேசப்படுதே‘, ‘வனயுத்தம்‘, ‘நான்காம்பிறை‘ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தில் விமல், ஒவியா ஜோடியாக நடத்துள்ளனர். ‘வனயுத்தம்‘ படம் சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதை. போலீஸ் அதிகாரியாக அர்ஜூன், வீரப்பன் கேரக்டரில் கிஷோர் நடத்துள்ளனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயங்கியுள்ளார். ‘நான்காம் பிறை’ பேய் கதை, பிரபு முக்கிய கேரக்டரில் வருகிறார்.
வருகிற 15-ந்தேதி ‘பரதேசி’, ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படங்கள் ரிலீசாகின்றன. ‘பரதேசி‘ படத்தை பாலா இயக்கியுள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார். ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். இந்தி, தமிழில் இப்படம் வருகிறது. பிப்ரவரி 22-ந்தேதி அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘ஆதிபகவன்’. விமல், சிவகார்த்திகேயன் நடத்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சினேகா நடித்த ‘ஹரிதாஸ்’, தருண்கோபி நடித்த ‘பேச்சியக்கா மருமகன்’, தலக்கோணம், கருணாஸ் நடித்த ‘சந்தமாமா’ ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ‘கீரிப்புள்ள’, ‘ஆண்டவ பெருமாள்’, ‘கண்பேசும் வார்த்தைகள்’, ‘சொன்னா புரியாது’, ‘அர்ஜூனன் காதலி’ போன்ற படங்களும் இம்மாதம் வருகின்றன.
No comments:
Post a Comment