காலைநேரத்தில் சாப்பிடும் உணவு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா ஸ்கூல் ஆப் நர்சிங் துறை மாணவர்கள், 6 வயதான 1,269 குழந்தைகளிடம் இந்த ஆய்வை நடத்தினர். காலை உணவின் அளவு மற்றும் அறிவுக்கூர்மை இதில் முக்கிய காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காலையுணவை சீராக சாப்பிடாத குழந்தைகளுக்கு வார்த்தைகளை உச்சரிக்கும் திறன் 5.58 புள்ளிகள் என்ற அளவிலும், அவர்களின் செயல்பாடு மிகக்குறைந்த அளவு அதாவது 2.50 புள்ளிகள் மற்றும் அவர்களின் அறிவுக்கூர்மை (திறன்) 4.6 புள்ளிகள் என்ற அளவிலேயே உள்ளது. சரியான நேரத்தில் மற்றும் ஒழுங்காக காலை உணவு சாப்பிடாத நிகழ்வு, பல்வேறு உடற் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களான புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழிகோலும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment