தி.மு.க. ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடம் பல்நோக்கு
சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்து,
அதற்கான பணிகளைத் தொடங்கியது.
இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரமணி ஐகோர்ட்டில்
மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசின் கொள்கை
முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி
செய்தனர். சுப்ரீம் கோர்ட்டில் வீரமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு
மனுவும் தள்ளுபடியானது. இதையடுத்து தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை
செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வீரமணி மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை விதித்தார். மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment