|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 April, 2012

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!



மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

உடல் ரீதியான பிரச்சினை, பொருளாதார சிக்கல், கிசு கிசு, செக்ஸ் சிக்கல், குடும்ப பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினை, கடந்த கால பிரச்சினை, எதிர்காலம் குறித்த பயம் போன்றவையே மனரீதியான சிக்கல் எழ காரணமாகிறது.மன அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற மனதிற்குள் மணியடிக்கும் சத்தமும், பேச்சுச் சத்தமும் கேட்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சிலருக்கு நேர்மறையானதாகவும், சிலருக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதில் கேட்கும் பேச்சு அதிகாலை நேரத்திலோ, அல்லது இரவிலோ தொந்தரவை தரும். இதனால் பாதிப்பிற்குள்ளாகும் சரியாக உறங்க முடியாது. சராசரி மனிதர்களைப் போல நடமாட முடியாது. இதை ஒரு சில பழக்கத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர். பணிச் சூழலில் உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடலில் இருக்கும் போது நம்மை திசை திருப்பும் வகையில் மனதிற்குள் பேச்சுச்சத்தம் கேட்டால் அது நம் வேலைக்கே உலை வைத்து விடும். எனவே மன சத்தம் குறித்து போகஸ் செய்யவேண்டும். பின்னர் மெடிடேசன் செய்வதன் மூலம் இந்த அழுத்தத்தை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவைகளும் மனதில் எழும் இந்த பேச்சுக்களை குறைக்க வழி செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனதை கட்டுப்படுத்த உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிக்கலில் இருந்து முழுவதுமாக நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்ம வேண்டும். எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம்பிக்கையின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.உள்ளத்தில் அமைதி ஏற்பட மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்ப வேண்டும். எதிர்மறை சாத்தானை விரட்டினால்தான் நேர்மறை தேவதை மனதில் குடிபுகும். கவலைகளை புறந்தள்ள வேண்டும். நம்மால் எதுவும் முடியும், இதெல்லாம் சாதாரணம் என்று மனதில் நினைத்தாலே போதும். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது. மனதில் பேச்சு சத்தமும் கேட்காது என்கின்றனர் நிபுணர்கள்.

தனித் தமிழ் ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், கருணாநிதி!


இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. தனித் தமிழ் ஈழம் நிச்சயம் ஒருநாள் மலர்ந்தே தீரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.“இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது” என்று 1983ம் ஆண்டில் தான் பேசியதையும் கருணாநிதி நினைவுகூர்ந்துள்ளார்.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து வினாக்கள் தொடுத்தபோது; “இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு “தனி ஈழம்” என்று பதிலளித்திருந்தீர்கள்; அந்தத் “தனி ஈழம்” தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?” என்ற கேள்வி ஒன்றுக்கு “தனி ஈழம்” வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதே;

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன; அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் “தனி ஈழம்” கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தம் தர வேண்டும்” என்று நான் பதிலளித்து, அனைத்து ஏடுகளிலும் அது வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல தொலைபேசிகள் - வைரமுத்து போன்றோர்- அதைப்பற்றி என்னிடம் பேசியதைத் தொடர்ந்து சற்று விரிவாக இதுபற்றி இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கேள்விக்கும் பதிலுக்கும் அடிப்படையாக அமைந்தது கடந்த 12-4-2012 தேதிய “விடுதலை” நாளிதழில் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்திதான்! அந்தச் செய்திக்கு தலைப்பே “தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு”.

அதில், “தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐ.நாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.” இந்தச் செய்தியினைத் தொடர்ந்துதான் நான் என்னுடைய பதிலை எழுதியிருந்தேன்.

கிழக்கு தைமூர் 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகல் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1975ம் ஆண்டு கிழக்கு தைமூர் தனிச் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து கொண்டது. ஆனால் அதே ஆண்டு இந்தோனேசியாவால் படையெடுக்கப்பட்டு, அந்த நாட்டின் 27வது மாகாணமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 1999ம் ஆண்டிலேதான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் கிழக்கு தைமூருக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மே 20ம் நாளன்று 21ம் நூற்றாண்டின் சுய நிர்ணய உரிமை பெற்ற முதல் நாடாக சரித்திரத்திலே இது இடம் பெற்றது. கிழக்கு தைமூர் நாட்டைப் போலவேதான், யூகோஸ்லோவியா நாட்டிலிருந்து மாண்டி நீக்ரோ எனும் தனி நாடு, 3-6-2006 அன்றும்; செர்பியாவிலிருந்து கொசோவோ எனும் தனி நாடு 17-2-2008 அன்றும்; எகிப்து நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் தனி நாடு 2011ம் ஆண்டிலும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் பொது வாக்கெடுப்பு நடைபெற்று உருவாக்கப்பட்டன.அதேபோன்ற ஒரு நடைமுறையைத்தான் தனித் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதற்குத் தான் இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம்.

இந்த வாக்கெடுப்பு பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987 அன்று சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே, “ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான ஷரத்து- வட கிழக்கு பகுதிகள் இரண்டு மாகாணங்கள்- அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஈழத் தமிழ் மாநிலமாக தமிழர் தாயகமாக ஒரு மாநில அரசு அங்கே உருவாகக்கூடிய அளவிற்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி உரிமையோடுகூடிய ஒரு மாநில அரசு உருவாகக்கூடிய அளவிற்காவது இடைக் காலத்தில்-- குறிக்கோள் தமிழ் ஈழம் என்றிருந்தாலும்கூட, ஒரு ஏற்பாடு ஒப்பந்தத்தில் வேண்டும் என்று போராளிகள் கேட்டார்கள்.நாமும் அதைத்தான் வலியுறுத்தினோம். ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் இப்பொழுது ஒன்றாக ஒரு நிர்வாகத்திலே வரும் என்றாலுங்கூட, சில மாதங்களுக்குப் பிறகு “ரெபரெண்டம் (வாக்கெடுப்பு)” வைக்கப்படும். பொதுமக்களுடைய வாக்கெடுப்பு நடைபெறும்.அதிலே கிழக்கு மாகாண மக்கள் வடக்கு மாகாணத் தோடு இணைந்திருக்க சம்மதித்தால் இரண்டும் ஒன்றாக தொடர்ந்திருக்கும்.இல்லையேல் வடக்கு மாகாணம் தனி, தமிழர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணம் தனி. இரண்டும் ஒரு மாகாணமாக இருக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்து காணப்பட்டது.

கேட்டபோது சொன்னார்கள். பொது வாக்கெடுப்பு நடைபெற்றால் கூட, அது நியாயமாக நடைபெறும்; இந்திய அரசு, இலங்கை அரசு என்ற இரண்டு அரசுகளும் தலையிடாமலேயே அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்றெல்லாம் சொன்னார்கள்” என்று விளக்கிப் பேசினேன்.ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த வாரமே, இலங்கையிலே, கொழும்பிலே ஜெயவர்த்தனா, ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்ட ஜெயவர்த்தனா- கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம்; இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத்தமைந்த ஷரத்தை எழுதிக் கையெழுத்துப் போட்ட அதே ஜெயவர்த்தனா- “அப்படி ஒரு பொதுத் தேர்தல் வரும்போது, வாக்கெடுப்பு நடத்தும் போது, நான் கிழக்கு மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன்” என்று சொன்னார்.எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார். 27-8-1983 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு. கழகப் பொதுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே,

This Council does not think that it would be possible for the Tamils in Sri Lanka to live in peace with the Sinhalese under the same flag and preserve their culture, individuality, language and way of life in the wake of the recent perpetration of genocide. Therefore, this Council feels that a separate Tamil Eelam, shall be the only remedy and permanent solution to the problem and extends its whole-hearted support for all such efforts that shall be aimed at creating a new Tamil Eelam”

நடைபெற்ற இனநாசக் கோரக் கொலைகளுக்கும் சொத்து சேதத்திற்கும் பிறகு இனியும் தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே அரசமைப்பின் கீழ் தங்கள் உயிரையும் உடைமையையும் தனிக் கலாச்சாரத்தையும், மொழியையும் வாழ்க்கை முறையையும் காப்பாற்றிக்கொண்டு வாழ முடியும் என்று இந்தப் பொதுக் குழுவால் கருத முடியவில்லை. எனவே விடுதலை பெற்ற தனித் தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தரப் பரிகாரம் என்று இந்தப் பொதுக்குழு கருதுகிறது. அதற்கான முயற்சிக்கு தி.மு.கழகம் ஈழத் தமிழர்களுக்கு தன் மனப்பூர்வமான ஆதரவை நல்கும் என்றும் இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது) இந்தத் தீர்மானத்தை விளக்கி 28-8-1983 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது” என்று நான் பேசினேன்.1976ம் ஆண்டு ஈழத்தில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில்- ஈழத் தந்தை செல்வா “தமிழர் ஐக்கிய முன்னணி” என்பதை “தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி” எனத் திருத்தி அறிவித்ததோடு- ஈழத் தமிழகம் - சுதந்திரம் பெற வேண்டுமென்ற பிரகடனத்தை வெளியிட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்தப் பெருமகன் மறைந்து விட்டார்.தனித் தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையாகும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்ற உண்மையினை பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.

ஆதி இரும்புக் காலம் என்று கூறப்படுகின்ற; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் தமிழ் மக்கள் சிற்றரசு அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரம் புதைபொருள் அகழ்வாராய்வின்போது கிடைத்துள்ளது. இக்கால கட்டத்தில் கந்தரோடை, தமிழ்ச் சிற்றரசின் தலைநகராக இருந்துள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இந்தப் பின்னணியிலேதான் இலங்கை வரலாற்றில் கண்டியை 1815 வரை ஆண்ட தமிழ் மன்னர் கண்ணுச்சாமி என்கிற விக்ரமராஜ சிங்கன் வெள்ளையருடன் நடந்த போரில் தோல்வியுற்று கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் வேலூரில் சிறைவைக்கப்பட்டிருந்தார். 16 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த மன்னர் வேலூரில் சிறையிலேயே மாண்டு போனார். அந்த மன்னரின் பெயரையும் இலங்கைத் தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றையும் மறந்துவிடாமல் நினைவூட்ட கழக அரசு காலத்தில் 1.7.1990 அன்று வேலூரில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் “முத்து மண்டபம்” அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்”


என்ற பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிக் கவிதை வரிகளை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம்; சரித்திரத்தின் தொடர்ச்சியாக, தனித் தமிழ் ஈழம் மலர்ந்திட வேண்டும் என்ற தாகம் என்னுள் ஏற்படுவதை நான் ஏக்கத்தோடு உணருகிறேன்.“தனித் தமிழ் ஈழம்” எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. இன்றில்லாவிட்டால் நாளை - நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் - தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்! ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்! இவ்வாறு கருணாநிதி தனது கடிதத்தில். 

ராஜபட்ச விரித்த வலை...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ! இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவித்ததன் காரணமே, இந்த நிகழ்ச்சி நிரல் குறை கேட்கச் செல்வதாக இல்லை, விருந்து உண்ணச் செல்வதாக இருக்கிறது என்பதால்தான். ""போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறலைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாமல் பயணத் திட்டம் அமைந்துள்ளது. விருந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்குச் சாதகமான கருத்து இந்தியாவில் ஏற்படத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போன்று உள்ளது'' என்று இடம் பெறாததற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா கூறி இருந்தார்.


அதிமுக இத்தகைய கருத்து மாறுபாடு தெரிவித்தவுடனேயே இந்தப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், அதிபர் ராஜபட்சவை நேருக்கு நேராக, பத்திரிகையாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்பதற்கும் இந்திய அரசு வகை செய்திருக்க வேண்டும். அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகூடக் கோரவில்லை. அதிமுக வராவிட்டால் நல்லது என்கின்ற ரீதியில்தான் மத்திய அரசு செயல்பட்டது.
திடீரென்று இக்குழுவில் திமுக சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று ஏப்.15-ஆம் தேதி அறிவிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. "எந்தப் பயனும் இல்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன' என்பதுதான் அவர் தரும் விளக்கம். இது உண்மையென்றால், அவர் இந்தக் குழு அமைக்கப்பட்டபோதே இதைத் தெரிவித்திருக்கலாம். ஜெயலலிதா தனது முடிவை அறிவித்த பிறகு இதை அறிவித்திருக்க வேண்டியதில்லை.


மேலும், 2010-இல் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குழு இலங்கை சென்று முள்வேலிக்குள் இருக்கும் மக்களின் துயரங்களைப் பார்த்து வந்தது. இந்தக் குழுவில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். நியாயமாகப் பார்த்தால், 2010-க்கும் 2012-க்கும் இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய, முன்பு சென்ற இருவரில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைத்து, நிலைமையை ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பையும் தவற விட்டது திமுக தலைமை.திமுகவும், அதிமுகவும்தான் தமிழகத்தைக் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்துவரும் கட்சிகள். இந்த இரு கட்சிகள்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். இவர்கள்தான் உண்மை நிலையை நேரில் கண்டுவந்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள். மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால், இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை அவர்களும் செய்யவில்லை.


பாஜக சார்பில் சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பிரச்னை இருமுனை கத்தி என்பதை உணர்ந்தவர். நாளைக்கு மத்தியில் பாஜக அரசு அமையுமானால், அப்போது இலங்கையுடனான ராஜ்ஜீய உறவுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் பேசுவார், கருத்து சொல்வார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேசப்போவதில்லை. கேள்வி கேட்கப் போவதும் இல்லை.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.


திமுகவும், அதிமுகவும் இல்லாத குழு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பற்றிக் கேட்கப் போவதில்லை. அதிகபட்சம் போனால், இந்தியாவின் நிதியுதவி பயன்படுத்தப்படுகிறதா என்கிற புள்ளிவிவரங்களைக் கேட்டுப் பெறுவார்கள், அவ்வளவே! இலங்கையிலிருந்து திரும்பி வரும் இந்தக் குழுவின் கைகளில் விருந்தின் மணம் இருக்குமே தவிர, ஆற்றொணாது அழுத ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்த ஈரம் இருக்கப் போவதில்லை.அப்படியானால் அவர்தம் துயரங்களை எப்படித்தான் அறிந்துகொள்வது? பாரதி காட்டிய வழிதான்..."அவர் விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே. துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரைப்பாயோ.

பண வெறியும், அதிகார போதையும்மாணவர்களுக்கு ‘பிட்’ தரும் முயற்சி!


திருவண்ணாமலையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியான செயின்ட் மவுன்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கணக்கு தேர்வன்று திடீரென அப்பள்ளிக்கு வருவாய்துறை மற்றும் காவல்துறையினரோடு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவரான அன்சூல்மிஸ்ரா.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ தரும் முயற்சியில் இருந்த ஏழு ஆசிரியர்களை பிடித்தார். அதோடு அப்பள்ளியின் அலுவலக அறையில் அன்றைய கணக்கு பாடத்தேர்வு கேள்வி தாள் ஒன்றும், அதற்கான விடை எழுதப்பட்ட பேப்பர் ஒன்று ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பிடித்தார் கலெக்டர்.அதன்பின் நடந்த விசாரணையில், நிர்வாகம் சொல்லியே இதனை செய்ததாக ஆசிரியர்கள் வாக்குமூலம் தர தேர்வு பணியில் இருந்த 7 ஆசிரியர்கள் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப் பட்டுள்ளனர். 

அதோடு மோசடியில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகி சௌமியா மீது காவல்துறையில் சி.இ.ஓ நூர்ஜகான் புகார் தர அதன்படி நிர்வாகம் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ குணசேகரன் இதுப்பற்றி கேள்வி எழுப்ப, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அரசின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு பிட் கொடுக்க காரணமென்ன என விசாரித்தபோது, நிர்வாகத்தின் பண வெறியும், அதிகார போதையும் தான் என தெரியவருகிறது.மவுன்ட் செயின்ட் ஜோசப்பள்ளி கன்னியாஸ்திரிகள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.இப்பள்ளி நகரத்தின் மிகவும் பிரபலமான பள்ளி. இங்கு படித்தவர்கள் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் தரத்தை கண்டு நகரத்தில் உள்ள பலர் இங்கு தங்களது பிள்ளைகளை சேர்க்க ஆசைப்படுகின்றனர்.இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இப்பள்ளி சேர்க்கையில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. பள்ளி திறப்பதற்க்கு முன்பே எல்.கே.ஜீ, ஆறாம் வகுப்பு, பதினோறாம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒரு தேர்வு நடத்தும் இதற்கான விண்ணப்ப கட்டணம் தனி, தேர்வு பெற்றபின் நன்கொடை, கல்வி கட்டணம், காலண்டு கட்டணம் என தனித்தனியாக பெறுவார்கள். பணம் போனாலும் பரவாயில்லை சீட் கிடைத்தால் போதும்மென அவர்கள் கேட்கும் தொகையை கொட்டி தந்தனர் பலப்பெற்றோர்கள். 

புணம் வாங்குகிறோமே அவர்கள் தேர்ச்சி பெற்றால் தான் தங்களுக்கு மரியாதை என்பதை உணர்ந்தே தேர்வு காலங்களில் பிட் அடிக்க வைப்பது, புத்தகம் பார்த்து எழுத வைப்பது, தேர்வு மையத்தில் சொல்லி தருவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு மாணவர்களை அதிகளவு வெற்றி பெற வைத்து 100 சதவிதம் தேர்ச்சி, மாவட்டத்தில் முதலிடம், இரண்டாமிடம்  என விளம்பரம் செய்து அந்த ஆண்டு கல்வி கட்டணத்தை கணிசமாக உயர்த்தி வந்தன இப்பள்ளி நிர்வாகம்.
பிட் அடிக்க வைக்க தங்களுக்கு தோதான ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளராக இருக்க வேண்டும், தேர்வு நடைபெறும் அறையின் பொறுப்பு ஆசிரியராக தமக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வர செய்ய என்ன செய்யலாம் என யோசித்தே அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியை பெற முயன்றது.அதன்படி அனைத்து கட்சியிலும் உள்ள பிரபலமான அரசியல்வாதிகளின் பிள்ளைகள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலகர்களின் பிள்ளைகளுக்கு நுழைவு தேர்வு இல்லாமல் சீட் தந்து தனது பலத்தை பெறுக்கிக்கொள்ள தொடங்கியது இப்பள்ளி நிர்வாகம். சமீப ஆண்டுகளாக இப்பள்ளியில் பயிலும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தவறான திசையில் நோக்கி செல்ல அதை கண்டிக்க முடியாமல் தடுமாற தொடங்கியது நிர்வாகம். அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் தோல்வியுற்றால் தங்களுக்கு அவமானம். 100 சதவித தேர்ச்சியில்லையென்றால் வேறு பள்ளிகளுக்கு வசதியானவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் போய்விடுவார்கள் என்பதால் அப்பிள் ளைகளை தேர்ச்சி பெற வைக்க பிட் தந்து தேர்வு எழுத வைக்க தொடங்கியது இப்பள்ளி. கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் தேர்வு நேரத்தின் போது பிட் தருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டு எழுந்து பறக்கும்படையினர் ஒரு சிலமுறை செக் செய்ய சென்றனர்.

ஆனால் அப்போது சிக்கவில்லை. அதற்கு காரணம், திருவண்ணாமலை சி.இ.ஓ அலுவலகத்தில் சி.இ.ஓவின் பி.ஏவாக உள்ள ஒருவரின் மகன் இப்பள்ளியில் படிப்பதால் ரெய்டு தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தந்துவந்துள்ளார். இதனால் நிர்வாகம் அப்போதுயெல்லாம் உஷாராக இருந்தன. இந்தமுறை அந்த அலுவலர், பல அரசியல், சில தலைமையாசிரியர்களின் பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். ஆங்கில தேர்வின் போது அதிகமாக பிட் தந்துள்ளனர். இதனை உள்வாங்கிய நன்றாக படிக்கும் ஒரு மாணவி தனது பெற்றோர் இதுப்பற்றி கூற அவர்கள் கலெக்டருக்கு இமெயிலில் புகார் அனுப்பினர். அதன்படியே கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக இந்த ரெய்டை நடத்தி மோசடி செய்தவர்களை பிடித்துள்ளார்.


தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் எது? ஜெயலலிதா விளக்கம்!!

13.4.2012 அன்று நடைபெற்ற சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான காரணங்கள் எவை என நான் எடுத்துக் கூறியது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதைக் கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, வீண் விதண்டா வாதங்களை தனது கட்டுரையில் எடுத்து வைத்துள்ளார். சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளதை நான் சுட்டிக்காட்டியதற்கு, இது என்ன ஆதாரமா? என்று வினவியிருக்கிறார் கருணாநிதி. நான் மதுரை ஆதினம் என்பவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது ஆதாரம் இல்லையென்றால், பெயர் குறிப்பிடப்படாமல், ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும், ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்று கூறி, ஒரு சட்டத்தை கருணாநிதி இயற்றியது ஆதாரத்தின் அடிப்படையிலா?

தி.மு.க. ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத்தமிழ் மாநாடு, தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கருணாநிதி. 1968 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இது தமிழ்மொழியை பரப்புவதற்கு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், 2010 ஆம் ஆண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழ் மாநாடுகளின் வரிசையில் இடம் பெறாத, மாநாடு. கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் முன்வரிசையில் அமர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். உண்மையான தமிழ் அறிஞர்கள் பின் வரிசைக்கு தள்ளப்பட்டனர். கருணாநிதி தன்னுடைய கட்டுரையிலே, சித்திரையில் தொடங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பௌர்ணமி அன்று வரும், நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும் என்று நான் கூறியதை சுட்டிக்காட்டி, சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே என்று கேட்டிருக்கிறார். 

சித்திரை மாதம் பௌர்ண மியன்று சித்திரை நட்சத்திரம் வருகிறது என்றும்; கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வருகிறது என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டுவிட்டதால், பிற மாதங்களை இங்கே விளக்கிக் கூற விரும்புகிறேன். வைகாசி மாதம் பௌர்ணமியன்று விசாகம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, வைசாகம் நட்சத்திரம் திரிந்து, விசாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனி மாதம் பௌர்ணமியன்று, அனுஷம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, அனுஷம் நட்சத்திரம் மருவி, ஆனி என்றழைக்கப்படுகிறது. ஆடி மாதம் பௌர்ணமியன்று பூராடம் நட்சத்திரம் வருகிறது. பூராடம் - பூராடி என திரிந்து, ஆடி மாதம் என்றழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமியன்று திருவோணம் நட்சத்திரம் வருகிறது. அதாவது திருவோணம் அல்லது சிரவணம் நட்சத்திரம், சிராவணியாக திரிந்து, ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று பூரட்டாதி நட்சத்திரம் வருகிறது. பூரட்டாதி நட்சத்திரம் திரிந்து, புரட்டாசி என்றழைக் கப்படுகிறது. ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரம் வருகிறது. அஸ்வினி நட்சத்திரம், ஆஸ்விஜம் என்ற ழைக்கப்படுகிறது. அது திரிந்து ஐப்பசி என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில், மிருக சீர்ஷம் நட்சத்திரம் வருகிறது. மிருகசீர்ஷம் நட்சத்திரம், மார்க சீர்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது திரிந்து மார்கழி என்றழைக்கப்படுகிறது. தை மாதம் பௌர்ணமி அன்று, பூசம் நட்சத்திரம் வருகிறது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இது வேதை ஆனது. மாசி மாதம் பௌர்ணமியன்று மகம் நட்சத்திரம் வருகிறது. மகம் நட்சத்திரத்தை மாக, அதாவது மாசி , என்றும் அழைப்பார்கள். இதுவே மாசி என்றழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் பௌர்ணமியன்று உத்திரம் நட்சத்திரம் வருகிறது. இதை உத்திரப் பல்குனி என்றும் அழைப்பார்கள். இதுவே பங்குனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி சென்னப்பட்டினம் என்பது காலப்போக்கில் சென்னை என்று மருவியதோ, சைலம் என்பது சேலம் என்று எவ்வாறு மருவியதோ; அது போல் தான் இவையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று மறைமலை அடிகள் கூறவில்லை என் பதை எடுத்துக்காட்ட கருணாநிதியின் கருத்தை ஒட்டிய, சிறுவை நச்சினார்க்கினியன் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்ட மலரில், திருவள்ளுவனார் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும் என்று 1935 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தில் மறைமலையடிகளார் பேசியதாக கூறியிருப்பதை மேற்கோள் காட்டினேனே தவிர, அந்தப் பக்கத்திற்கு முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன் தெரிவித்துள்ள கருத்தைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்று மறைமலை அடிகளார் சொல்லவில்லை என்பதற்காகத்தான் மேற்படி கட்டுரையை நான் மேற்கோள் காட்டினேன். தவிர, அந்தப்பக்கத்திற்கு முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன் தெரிவித்துள்ள கருத்தைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. தை முதல் நாள் தான் தமிழ்ப்புத் தாண்டு என்று மறைமலை அடிகளார் சொல்லவில்லை என்பதற்காகத்தான் மேற்படி கட்டுரையை நான் மேற்கோள்காட்டினேன். வாழ்வியற் களஞ்சியம், என்ற நூலைக் குறிப்பிட்டு, ஆகம விதியின்படி தை முதல் நாள் தான் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார் கருணாநிதி. தை பிறந்தால் வழி பிறக்கும், என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி என்ற நூலினை மேற்கோள் காட்டி, அந்த நூலில் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்பதாக கூறியிருக்கிறார் கருணாநிதி. 

அந்த நூலில் 113-வது பக்கத்தில் இச்செய்தி, தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்று இருப்பதை தனக்கு வசதியாக கருணாநிதி மறைத்துவிட்டார்.அந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் தை மாதம் தான் தமிழ் ஆண்டின் தொடக்க மாதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இதனை அடுத்து, தை - ஒரு திங்கள்; தமிழ் மாதம் ,ஜனவரி-பிப்ரவரி என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?  தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23.1.2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியிருக்கிறார். ஆளுநர் உரையில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, கருணாநிதியின் மகள் கனி மொழியால் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் விழாவில் கருணாநிதி, சங்கமம் போற்றுதும் என்று போற்றிப்பாடி, இது ஆண்டு தோறும் நடக்க வேண்டும்; பொங்கல் திருநாளை நினைவூட்டும் வகையில் தொடர்ந்து நடக்க வேண்டும். தமிழரின் புத்தாண்டு தை முதல் நாள் என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள். 

அதை அதிகாரப் பூர்வமாக அறி விக்கும் நாள் விரைவில் வரும் என்று கூறியுள்ளார். எனவே, சென்னை சங்கமம் விழாவில் தான், இது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை, தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் தான் ஆண்டுதோறும் சென்னை சங்க மம் விழா நடத்தப்பட்டு, அதற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்று கருணாநிதி எண்ணினார் போலும்! தமிழர் திருநாள் என்னும் தலைப்பில் மு.வ. அவர்களால் 1960 ஆம் ஆண்டு கலைமகள் பொங்கல் மலரில் எழுதப்பட்ட கட்டுரையில், தைத் திருநாளை இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருவிழா என்று தான் குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, அதை தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2008 ஆம் ஆண்டு, ஆளுநர் உரையில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கருணாநிதி, திருவள்ளுவர் நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று 1963-ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் கொண்டு வரப்பட்ட தனி நபர் தீர்மானத்தின் மீது இந்த சட்டப் பேரவையில் உரையாற்றிய போது, மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக விட்டு வருகிறோம். ஒரு திங்களில் ஒரு இரண்டாம் சனிக்கிழமையைக் கூட, திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் கொண்டாட,

விடுமுறை தினம் என்று அறிவிக்கலாம். இரண்டாம் சனிக்கிழமையன்று என அமையாது திங்கள் கிழமை அல்லது செவ்வாய்கிழமை என்று வருமானால், அந்த திங்களில் இரண்டாம் சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டுவிட்டு, திருவள்ளுவருடைய நினைவு நாள் என்று குறிக்கப்பட்ட தினம் என்று வருகிறதோ அன்றைக்கு விடுமுறை அளிக்க அரசாங்கம் முன் வரலாம். திருவள்ளுவருடைய தினத்தை நவம்பர் மாதம் கொண்டாடுவது என்றால் நவம்பர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடுவதற்கு பதிலாக, அந்தத் திங்களில் திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் குறித்த தினத்திற்கு விடுமுறை அளிக்கும்படியாக இந்தத் தீர்மானத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம் என்று பேசியிருக்கிறார். ஏன் அப்போது இப்படி பேசினார் கருணாநிதி? அப்பொழுதே திருவள்ளுவர் தை மாதத்தில் தான் பிறந்தார் என்று கூறி, அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கலாமே! இவ்வாறான கடிதம், இது ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டிய பொருள் என்று அமைந்துவிடும் என்பதால், அரசின் அறிவுரை காரண மாகவோ என்னவோ இந்த வாசகங்கள் அடிக்கப்பட்டு, திருத்திய கடிதம் தான் அரசுக்கு அனுப்பப்பட்டது. முறையாக ஆய்வு எதையும் செய்யாமல் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, அந்தச் சட்டத்தை இயற்றினார் கருணாநிதி. ஆனால், அந்தச் சட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை. தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து செய்தேனே தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ 2008 ஆம் ஆண்டு, சென்னை சங்கமம் விழாவில் உரையாற்றும் போது, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என விரைவில் அறிவிக்கப்படும் என கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, 17.1.2008 அன்று, அன்றைய தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கருத்துருவில், 2004 ஆம் ஆண்டு அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், சித்திரை முதல் நாளுக்குப் பதிலாக, தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கக் கருதினால், இப் பொருண்மையைத் தமிழ் வளர்ச்சி மன்றத்தில் வைத்து, ஆய்வு செய்து முடிவு செய்வது ஏற்புடையதாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார். 

இவ்வாறான கடிதம், இது ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டிய பொருள் என்று அமைந்துவிடும் என்பதால், அரசின் அறிவுரை காரண மாகவோ என்னவோ இந்த வாசகங்கள் அடிக்கப்பட்டு, திருத்திய கடிதம் தான் அரசுக்கு அனுப்பப்பட்டது. முறையாக ஆய்வு எதையும் செய்யாமல் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, அந்தச் சட்டத்தை இயற்றினார் கருணாநிதி. ஆனால், அந்தச் சட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை. தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து செய்தேனே தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

கொலையும் செய்வாள்...?

நெல்லை ஜங்ஷன் ரயில்வே காலனியை சேர்ந்த ரயில்வே ஊழியர் பரமசிவன் மகன் சரவணக்குமார் (23). கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 9ம் தேதி நெல்லையில் இவர் மாயமானதாக கூறி இவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போன சரவணக்குமாரின் மனைவி சத்தியாவும், கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த டாக்சி டிரைவர் கனகராஜ் என்பவரும் நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. 

நெல்லை சந்திப்பு போலீசார் உடனடியாக கொடைக்கானல் சென்று கனகராஜ், அவரது நண்பர்கள் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த மதன்(33), அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஸ்(23), ரஞ்சித்குமார்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் சரவணக்குமாரின் மனைவி சத்தியாவையும் கைது செய்தனர். சரவணக்குமாரின் மனைவி சத்தியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘’எனது திருமணத் திற்கு முன்பே நானும், கனகராஜூம் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம்.எனக்கும், சரவணக்குமாருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் அதற்கு பின்பும் எனக்கும், கனகராஜூக்கும் உள்ள பழக்கம் நீடித்து வந்தது. என்னால் என் காதலரை மறக்க முடியவில்லை. என் கணவருடன் வாழ முடியவில்லை.

கடந்த ஏப்.2ம் தேதி நான் கனகராஜை அழைத்து கொண்டு வீட்டை வீட்டு வெளியே சென்றுவிட்ட நிலையில், எனது தந்தை தங்கவேல் நான் மாயமா னதாகவும், கனகராஜ் என்னை கடத்தி சென்றுவிட்டார் என்றும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பின்னர் நானே காவல் நிலையம் சென்று, யாரும் என்னை கடத்தி செல்லவில்லை என்றும், பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும் தெரிவித்தேன்.இதனால் போலீசார் மேல்நடவடிக்கையை கைவிட்டனர். இந்நிலையில் எனது தந்தையார், என்னையும், எனது கணவர் சரவணக்குமாரையும் கடந்த 4ம் தேதியன்று நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள எனது மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். நான் இங்கிருந்து கொண்டே கனகராஜூடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தேன்.‘எனது கணவரை தீர்த்து கட்டிவிடு. அப்போதுதான் நாம் இருவரும் சேர்ந்து ஜாலியாக வாழ முடியும்‘ என நான் கனகராஜூடம் தெரிவித்தேன். இதை கேட்ட கனகராஜ் தன் நண்பர்களோடு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 9ம் தேதி நெல்லை வந்த கனகராஜ், என்னிடம் தொடர்பு கொண்டு, சரவணக்குமாரை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொண்டார். நானும் எனது கணவரிடம் நமது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சில நண்பர்கள் இப்போது தங்களை காண வந்திருப்பதாக கூறி, ஜவுளி கடைக்கு அனுப்பி வைத்தேன்.அங்கு நின்றிருந்த கனகராஜூம், அவரது நண்பர்களும் எனது கணவரை ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை காரிலேயே மது அருந்த செய்து, கயிற்றால் கழுத்தை நெரித்து, கொடைக் கானலுக்கு கொண்டு மயிலாடும் பாறை என்ற இடத்தில் இருந்து உடலை பள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளனர்’’என்று கூறினார். கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

18 April, 2012

இதே நாள்...


  • இந்தியாவின் முத‌ல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
  • உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன(1954)
  • ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)
  • இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)

2023க்குள் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம்!


வரும், 2023க்குள் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்' என, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் சூளுரைத்துள்ளார்.சென்னை ஒரகடத்தில், "டைம்லர்' நிறுவன வர்த்தக வாகன உற்பத்தி மையத்தை துவக்கிவைத்து, அவர் பேசியதாவது: டைம்லர் நிறுவனம், சர்வதேச அளவில் நடத்திவரும், 27 வாகன உற்பத்தி மையங்களில், சென்னை மையம், ஜெர்மனிக்கு வெளியே அமைக்கப்பட்ட, மூன்றாவது மிகப் பெரிய மையம் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். "பார்ச்சூன் 500' நிறுவனங்களின் பட்டியலில், 24வது இடத்தில் இருக்கும் டைம்லர் நிறுவனம், இந்தியாவின் டெட்ராய்டான சென்னையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சென்னையின் நற்பெயருக்கு வலு சேர்த்துள்ளது.

பெரிய சந்தை: உலகில் மிக வேகமாக வளரும் இரண்டாவது ஆட்டோ மொபைல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. பிரிட்டன் நிறுவன கணிப்புப்படி, இந்தியா, 2015ல் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாகத் திகழும். ஆட்டோ மொபைல் உற்பத்தித் துறையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1991ல், தாராளமயமாக்கல் கொள்கை வந்த பின், அனைத்து மாநிலங்களும் தொழில் மயமாக்கலில் துரிதமாக செயல்பட வேண்டியிருந்தது. இவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக, தமிழகம், 1992லேயே தொழிற்கொள்கையை வெளியிட்டது. இது, மாநில உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது.

ஏற்றுமதி கேந்திரம்: "போர்டு' மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களை ஈர்த்ததன் மூலம், தமிழகத்தில் இரண்டாவது ஆட்டோமொபைல் அலையை, 1991-96 இடையிலான என் ஆட்சிக்காலம் ஏற்படுத்தியது. இன்று, இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கேந்திரமாக சென்னை திகழ்கிறது. போர்டு, ஹுண்டாய், பி.எம்.டபிள்யூ, ரெனால்ட், நிசான் மற்றும் மிட்சுபிசி ஆகிய பெரிய கார் உற்பத்தியாளர்களைக் கொண்டிருப்பதன் மூலம், சென்னை தற்போது உலகின் முதல், 10 ஆட்டோ மொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாகி வருகிறது.

நிமிடத்துக்க மூன்று கார்கள்: ஓராண்டுக்கு, 13 லட்சம் கார்கள் மற்றும் 3 லட்சத்து, 60 ஆயிரம் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக தற்போது தமிழகம் இருக்கிறது. இதன்படி, ஒரு நிமிடத்துக்கு மூன்று கார்கள், 75 வினாடிகளுக்கு ஒரு வர்த்தக வாகனம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் மிகப் பெரிய அடித்தளத்தை தமிழகம் கொண்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறனில் 35 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கிறது. 2011ல் என் ஆட்சி அமைந்த பிறகு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. மிக விரைவில், மேலும் பல ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்களுடன் என் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்.

இலக்கு நிர்ணயம்: அடுத்த 11 ஆண்டுகளில், தமிழகம், 11 அல்லது அதை விட அதிக சதவீத உள்நாட்டு உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேல், 7 முதல், 10 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்த உந்துதலைக் கொண்டு, தமிழகத்திலும் இந்த வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும். என் இலக்கு, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக ஆக்குவது தான். இதெல்லாம் சாத்தியமா என, சில விமர்சகர்கள் கேள்வி எழுப்பலாம். யாரேனும் என்னைப் பற்றி சந்தேகப்பட்டால், என் வெற்றியின் மூலம் தான், அவர்களை நம்ப வைக்கிறேன். வெற்றி தான் ஆகச் சிறந்த பழிவாங்கல். வரலாறு, வெற்றியாளர்களால் தான் எழுதப்படுகிறது. வெற்றி, ஓரிரவில் கிடைப்பதல்ல. தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்பின் பலன் தான் வெற்றி.

தனித்தனி கொள்கை: என் கனவை நனவாக்க, என் அரசு பல்வேறு புதுமையான கொள்கை அளவீடுகளை முன்வைத்துள்ளது. புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியில் என் அரசு ஈடுபட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை, 2012, உற்பத்தித் துறையின் வேகத்தை, 14 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் அரசு, மிக விரைவில் ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தித் துறைகளுக்கு தனித்தனியே கொள்கை அறிவிப்புகளை வெளியிட உள்ளது. வரும், 2023ம் ஆண்டுக்கு முன், 2000 கி.மீ.,க்கு ஆறு மற்றும் எட்டு வழிப்பாதைகளையும், 5,000 கி.மீ.,க்கு நான்கு வழிப்பாதைகளையும் அமைக்க விரும்புகிறது. எரிசக்தி தேவையை நிறைவு செய்ய, அடுத்த, 10 ஆண்டுகளில், கூடுதலாக, 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய மாநிலங்களிடையே, வளர்ச்சிக்கான ஒரு புதிய வழிகாட்டியாக தமிழகத்தை உருவாக்க, என் அரசு தீர்மானித்துள்ளது. இதில் பங்கெடுக்க, அனைவரையும் வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பழிதீர்க்குமா சென்னை கிங்ஸ்!


:ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் புனேயிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இன்று சென்னையில் நடக்கும் 24வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சென்னை அணி பொதுவாக சொந்த மண்ணில் அதிகமாக வெற்றி பெறுவதில்லை. 2008ல் 7ல் 3 வெற்றி, 2010ல் 7ல் 4 போட்டிகளில் மட்டும் வென்றது. ஆனால், 2011ல் மட்டும் விதிவிலக்காக, பங்கேற்ற 8 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இம்முறையும் இது தொடர வேண்டும். இத்தொடரின் முதல் போட்டியில் சொந்தமண்ணில் வீழ்ந்த சென்னை அணி, கடைசியாக பெங்களூருவுக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தி அசத்தியது. புனேயில் நடந்த கடந்த ஆட்டத்தில் துவக்கத்தில் நல்ல ஸ்கோர் இருந்தும், பின் வரிசையில் தோனி உள்ளிட்ட வீரர்கள் மந்தமாக விளையாடியது, பவுலிங்கில் சொதப்பியது போன்ற காரணத்தால், வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட நேர்ந்தது. இந்த தவறை இம்முறை சரிசெய்வார்கள் என்று நம்புவோம். 

தேவையா விஜய்? சென்னை அணியின் துவக்க வீரர் முரளி விஜய், இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் (10, 2, 0, 11, 8) ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. "பவர் பிளே' ஓவர்களில் பந்துகளை வீணடிக்கும் இவருக்குப் பதில் வேறு வீரரை களமிறக்கினால் நல்லது. டு பிளசி அதிரடியை தொடர்வது நல்ல செய்தி. தவிர, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, கேப்டன் தோனி, பிராவோ ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்க்க வேண்டும்.பவுலிங்கில் சென்னை அணிக்கு போலிஞ்சர் தான் சற்று ஆறுதல் தருகிறார். இன்று இவர் மீண்டும் வருவார் என்று நம்பலாம். இவருடன் ஆல்பி மார்கல், பிராவோ ஆறுதல் தருகின்றனர். சுழலில் அஷ்வின், இதுவரை பங்கேற்ற 5 போட்டியில், 1 விக்கெட் மட்டும் கைப்பற்றியுள்ளது பெரும் ஏமாற்றம். இவருக்குப் பதில் 2 விக்கெட் வீழ்த்திய (4 போட்டி) ஜகாதிக்கு வாய்ப்பு தரலாம். ரவிந்திர ஜடேஜாவை பவுலிங்கில் சரியான நேரத்தில், தோனி பயன்படுத்த வேண்டும். 

துவக்க பலம்: புனே அணியின் "பேட்டிங்' பெரும்பாலும் துவக்க வீரர்களையே சார்ந்துள்ளது. ரைடர், உத்தப்பா இருவரையும் விரைவில் வெளியேற்றிவிட்டால், பின் ஸ்கோரை கட்டுப்படுத்தி விடலாம். இதுவரை ஜொலிக்காத கேப்டன் கங்குலி, இளம் வீரர்களுக்கு வழி விடவேண்டும். பின் வரிசையில் ஸ்டீவன் ஸ்மித், "ஆல் ரவுண்டர்' சாமுவேல்ஸ் இருவரும் பெரும் பலமாக உள்ளனர். வேகப்பந்து வீச்சில் இளம் டிண்டா தொடர்ந்து அசத்தலாக செயல்படுகிறார். இவருக்கு நல்ல "பார்ட்னர்' இல்லாதது அணிக்கு பெரும் பலவீனம் தான். இதனால், தென் ஆப்ரிக்க அணியின் பார்னலுக்கு மீண்டும் வாய்ப்பு தந்து பார்க்கலாம். கடைசி ஓவர் "வில்லன்' ஆஷிஸ் நெஹ்ரா, அனுபவ பவுலிங்கை கொடுத்தால் நல்லது.கெய்ல் புயலில் சிக்கி சிதைந்த, சுழல் வீரர் ராகுல் சர்மாவுக்குப் பதில், முரளி கார்த்திக் இடம் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

சென்னைக்கு முக்கியம்: தொடரின் துவக்கத்தில் இருந்தே வெற்றி தோல்வியை மாறி, மாறி பெற்று வரும் சென்னை அணி, இதுவரை 5ல் 2 வெற்றி மட்டும் பெற்றுள்ளது. தொடரில் நம்பிக்கையுடன் செயல்பட, இன்றைய போட்டியின் வெற்றி சென்னைக்கு முக்கியம். அதேநேரம் 5ல் 3 வெற்றியுடன், நல்ல ரன்ரேட்டும் வைத்துள்ள புனே, அவ்வளவு எளிதாக விட்டுத்தராது.

பத்மவிருதை திருப்பி ‌கொடுத்த காந்தியவாதி!

 காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்த பிரபல எழுத்தாளரும் காந்திவாதி தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், "முல்லக்' ஏல நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டது. இதனை இந்தியா உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காந்தியவாதி கிரிராஜ் கிஷோர் என்பவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் காந்தியின் ரத்தகறை படிந்த புல், 8 லட்ச ரூபாய்க்கும், கடந்த 1890ம் ஆண்டு அவர் சட்டம் படிப்பதற்காக பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, 28 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிரிராஜ்கிஷோர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளிக்க முடிவு செய்தார்.

வெளிநாடு செல்கிறார் அவுங் சான் சூச்சி!

மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.மியான்மர் நாட்டுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று தந்தவர் அவுங் சான். இவரின் மகள் அவுங் சான் சூச்சி. பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். தன்னுடன் படித்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை, காதலித்து மணந்தார். இவர்களுக்கு அலெக்சாண்டர் மற்றும் கிம் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த, 88ம் ஆண்டு தன்னுடைய தாயை பார்ப்பதற்காக தாயகம் திரும்பிய சூச்சி, நாட்டின் ஜனநாயக போராட்டத்தில் குதித்தார். 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்ற போதும், அவரை ஆட்சி அமைக்கவிடாமல், ராணுவ ஆட்சி வீட்டு சிறையில் அடைத்தது. 91ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது, இவர் பரிசை வாங்க நார்வே செல்லவில்லை. 99ம் ஆண்டு இவர் கணவர் புற்றுநோயால், லண்டனில் இறந்த போது கூட தாயகத்தை விட்டு செல்லவில்லை. வெளிநாடு சென்றால் ராணுவ அரசு தன்னை தாயகம் திரும்ப அனுமதிக்காது என கருதிய சூச்சி, ராணுவ ஆட்சியாளர்களால் பல ஆண்டு காலம் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார்.தற்போது, அவர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பார்லிமென்ட் உறுப்பினராகியுள்ளார். ஜனநாயக நடைமுறைகள் மியான்மரில் தலையெடுத்துள்ளதால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை தளர்த்த உலக நாடுகள் முன்வந்துள்ளன.

சமீபத்தில், மியான்மர் வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சூச்சியை லண்டன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், வரும் ஜூன் மாதம் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதை, அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் நார்வே செல்லும் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.அதிபர் ஜப்பான் பயணம் இந்நிலையில், மியான்மர் அதிபர் தீன் சீன், ஜப்பானில் ஆறு நாடுகள் பங்கேற்கும், ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார். ஜப்பானில் நாளை முதல் 24ம் தேதி வரை தாய்லாந்து, கம்போடியா, லவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, மியான்மர் நாட்டை சேர்ந்த அதிபர், 28 ஆண்டுக்கு பிறகு ஜப்பானுக்கு செல்வது, இதுவே முதன் முறை.

இனப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதில் பயன் இல்லை!

இலங்கையில் இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வை ஒதுக்கிவைத்துவிட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வரவேண்டும் என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமைதாங்கி இலங்கை வந்துள்ள சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.கூட்டு அரசினால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றோ, பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவோ காரணங்களை கூறி அரசியல் தீர்வை தாமதிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகள் அரசியல் தீர்வுக்கு சிறந்த சூழலாக அமைந்திருந்தன. எனினும் அந்த வாய்ப்பை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பெரும் துரதிருஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார்.இலங்கையின் தற்போதைய சூழல் மற்றும் இனப் பிரச்னைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய சுஷ்மா சுவராஜ்,இலங்கையில் நீண்டகாலமாகக் காணப்படும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். வளர்ச்சிப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றாலும் அரசியல் தீர்வு விஷயம் இன்றியமையாத ஒன்றாகும். எனவே அரசியல் தீர்வும் வளர்ச்சிப் பணிகளும் சம அளவில் இருக்க வேண்டும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இலங்கை அரசை சமாதானப்படுத்தவே இந்தியக் குழு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசை சமாதானப்படுத்தவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையால் நாடாளுமன்றக் குழு இலங்கை வரவில்லை என்றும், அதிபர் மஹிந்த ராஜபக்சேவை பாதுகாக்கவே என்றும் அவர் கூறியுள்ளார். நிச்சயமாக இந்த பயணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாள் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா, சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் கூவாகம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். இன்று மகாபாரத நிகழ்ச்சி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம், மே 1&ம் தேதி மாலை நடக்கிறது. 

அன்று தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் திரளுவர். அவர்கள் தங்களை மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு, கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்வர். இரவு முழுவதும் கூத்தாண்டவரின் பெருமைகளை சொல்லி கும்மி அடித்து, ஆடிப்பாடி மகிழ்வர்.மறுநாள் காலை அரவான் தேரோட்டம் நடக்கும். அரவான் கள பலி நிகழ்ச்சி முடிந்ததும் திருநங்கைகள் தாலியை அறுத்துவிட்டு ஒப்பாரி வைத்து அழுது புலம்புவர். பின்னர் அங்கேயே நீராடி வெள்ளை ஆடை உடுத்தி சொந்த ஊர் திரும்புவர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஐஏஎஸ் ஆங்கிலம் அவசியம் இல்லை!

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை என்று ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரியும், குப்பம் பல்கலைக்கழக துணை வேந்தருமான சுசி செல்லப்பா கூறினார்.தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் ஐஏஎஸ்., ஐபிஎஸ் தேர்வு எழுதுவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியை ரோசி வரவேற்றார். பாரத் கல்விக்குழு செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். ஆந்திர மாநிலம் குப்பம் பல்கலைக்கழக துணை வேந்தரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுசி செல்லப்பா முகாமில்,பல மாணவர்கள் படி த்து முடித்தவுடன் வேலை கிடைக்காமல் மனதில் கேள்விக்குறியை சுமந்துகொண்டு காலத்தை கடத்துகின்றனர்.போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைப்பது கடினம்தான். ஆனால், எந்த ஒரு விஷயத்திலும் தீவிர முயற்சி எடுத்து மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.’’

இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு மொழி ஒரு தடையாக இருப்பதாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும் என பல மாணவர்கள் தவறாக நினைக்கின்றனர். ஆனால், இப்போது தமிழிலும் இத்தேர்வை எழுத முடியும். நான் ஆங்கிலத்தில் படித்து பட்டம் பெற்றேன். ஆனால், தமிழில்தான் ஆட்சிப்பணி தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பல்வேறு இடங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பின் தற்போது பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வருகிறேன். எனவே ஆட்சிப்பணி தேர்வுக்கு மொழி ஒரு தடையல்ல. உள்ளத்தில் உறுதி, மனதில் திடத்துடன் செயலாற்றினால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் இன்று அல்லது நாளை முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளனர்.   இதையடுத்து அங்கு பராமரிப்பு இன்று கிடக்கும் மாஞ்சோலை மருத்துவமனை மிக அவசரமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையை புனரமைத்தல், மருத்து வம னையில் பெயர் பலகையை மாற்றுதல், விடுதி களுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல் போன்ற பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.கவனிப்பாரின்றி கிடக்கும்  மாஞ்சோலை மருத்துவமனை அனைத்து வசதிகளூடனும் இயங்குவதுபோல் காட்டி இந்திய குழுவை ஏமாற்ற இப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது!

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மிகவும் சரியாக உள்ளது என்று கூறிய உச்சநீதிமன்றம் தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கோரி தாக்கல்செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.தேமுதிக மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் தாக்கல் செய்திருந்த மொத்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இந்தக் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் சின்னம் தொடர்பாக பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கட்சிகள் தங்களுக்கு இந்தந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தன. இதையடுத்து தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் இடைக்காலமாக இவர்கள் கேட்ட சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தேமுதிக கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டிருந்தனர். அது ஒதுக்கப்பட்டது. தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் முரசு சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

3 நீதிபதிகளில் 2 பேர் தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி அத்தனை மனுக்களையும் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தனர். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்து கூறுகையில், தேர்தல் சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் சரியானவையே. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் யாரும் உரிமை கோர முடியாது என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர்.சட்டசபைத் தேர்தலில் தற்காலிகமாக முரசு சின்னத்தைப் பெற்றது தேமுதிக. இருப்பினும் தேர்தலில் நிறைய இடங்களில் வென்றதன் மூலம், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்பபடி அக்கட்சிக்கே முரசு சின்னம் ஒதுக்கபப்ட்டது. இருப்பினும் தொடர்ந்து அது தனது வாக்கு சதவீதத்தை தக்க வைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சின்னம் நிரந்தரமாகாது, கை நழுவிப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

17 April, 2012

இதே நாள்...

உலக பாரம்பரிய தினம்
  • ஈரான் ராணுவ தினம்
  • ஜிம்பாப்வே விடுதலை தினம்(1980)
  • ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
  • அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது(1949)

நூறு ஆண்டுகளில் இந்தியர் யாரும் நோபல் பரிசு பெறவில்லை!




சி.பி.எஸ்.இ., சேர்மன் வினித் ஜோஷி உலகளவில் இந்தியாவில் அதிக மாணவர்கள், கல்லூரி செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள், இந்தியாவில் அதிகம் உள்ளனர். அதனால், 2020, 2030ம் ஆண்டிற்குள் இந்தியா இளைஞர்கள் நாடாக காணப்படும். இந்தியாவில் படித்த இளைஞர்கள், அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பா நாடுகளிலும் இன்ஜினியர்களாகவும், டாக்டர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் சிறந்து விளங்குன்றனர். இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நிரந்தர வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். பத்து ஆண்டில் தற்போதைய இந்திய கல்வி முறை நிறைய மாற்றம் கண்டுள்ளது. மாணவர்களுடைய அறிவையும், தனித்திறமைகளையும் மேம்படுத்தக்கூடிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெற்றோர், குழந்தைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும், அவர்களுடைய எதிர்காலம் சிறக்க தங்களுடைய பங்களிப்பையும், ஊக்கத்தையும் வழங்க வேண்டும்.

கடந்த நூறு ஆண்டில் இந்தியர்கள் யாரும் நோபல் பரிசு பெறவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும் தான் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த குறையை போக்க தற்போதைய மாணவர்கள், சிறப்பாக படித்து அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அதற்கு பள்ளிகளும், பெற்றோரும் இணைந்து செயல்பட்டு சிறந்த மாணவர்களை உருவாக்கி, எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும். தற்போதைய போட்டி நிறைந்த உலகில், மாணவர்கள், படிப்பில் சிறந்த திறமைகளையும், முயற்சியையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசிடம் மண்ணெண்ணெய் பெற முடியாதவர்கள்.


மத்திய அரசிடம் வாதாடி மண்ணெண்ணெய் பெற்று மக்களுக்கு வழங்க முடியாதவர்கள், தி.மு.க., கூட்டு சதி என்று கூறி மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்' என்று, கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை386 கொலை: பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிற எந்த நிகழ்வும், தமிழகத்தில் நடக்கவில்லை என்று, டில்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகத்தில், இந்த 11 மாத காலத்தில், 386 கொலைகள், 178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், 10க்கும் மேற்பட்ட, "லாக்-அப்' மரணங்கள் நடந்துள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடந்து, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே மாதத்தில், 16 கொலைகள் நடந்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா அகராதிப்படி, இவை எல்லாம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத செயல்கள் போலும்.

அழுத்தம் தர வேண்டும்: தனி ஈழம் வழங்க தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று, எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐ.நா., தலையீட்டின்படி, இதுபோல பொது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, ஒரு சில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிக்கு மத்திய அரசு தேவையான ஆதரவும், அழுத்தமும் தர வேண்டும்.

கோபத்தில் இருந்து தப்ப... : தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசிடம் வாதாடி, போராடி பெற வக்கற்றவர்கள் எதற்கெடுத்தாலும், தி.மு.க.,வை குறை சொல்வார்கள். தி.மு.க., ஆட்சியில், தமிழக தேவைகளுக்கு மத்திய அரசிடம் பலமுறை கடிதம் மூலமும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக மண்ணெண்ணெய் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், "தி.மு.க., கூட்டு சதி' என்று கூறி, பொதுமக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். கடந்த 10 மாதங்களில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று, வருவாய் துறை அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சியில், 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...