இஸ்ரேலில் புகழ்பெற்ற ஜெருசலேம் நகரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர்.இத்தகவலை அந்நாட்டின் தேசிய மீட்பு பணிகள் துறை தெரிவித்துள்ளது.ஜெருசலேம் நகரப் பேருந்து நிலையத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது. இதில், 2 பேருந்துகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."பேருந்து நிலையத்தில் திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டேன். பயணிகள் அனைவரும் அவசரமாக கீழ இறங்கினர்." என்று மெய்ர் ஹகித் என்னும் ஓட்டுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.2004-ம் ஆண்டுக்குப் பிறகு, ஜெருசலேம் நகரில் இத்தகைய குண்டுவெடிப்பு நிகழ்வது இதுவே முதல்முறை.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெருசலேம் நகரில் குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment