இம்முறை ஆஸ்திரேலிய அணியில் ஹைடன், கில்கிறிஸ்ட், மெக்ராத், வார்ன் போன்ண ஜாம்பவான்கள் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு ஐந்து உத்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1. சேவக் அதிரடி:
வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அசத்திய சேவக், அதன் பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரு நாள் போட்டிகளில் 50 ஓவர்கள் நின்று விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். குறைந்தது இவர் 25 ஓவர்கள் நின்று விட்டாலே, அணியின் வெற்றி உறுதி.
2. துவக்கத்தில் "சுழல்':
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கத்தில் தமிழகத்தின் "சுழல்' அஷ்வினை பயன்படுத்திய தோனி, காலிறுதி போட்டியிலும் துவக்க ஓவரை வீசச் செய்யலாம். மறு முனையில் வழக்கம் போல ஜாகிர் கான் வேகப்பந்து வீச்சை தொடர வேண்டும்.
3. "மிடில்' ஓவரில் ஜாகிர்:
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வேகப்பந்து வீச்சு மோசமாக உள்ளது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், இந்தியா சார்பில் ஜாகிர் கான் தான் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரை, பழைய பந்தில் அதாவது 34 ஓவருக்கு முன்பும், 40 ஓவருக்குப் பின்பும் அதிகமாக பயன்படுத்தினால், "ரிவர்ஸ் சுவிங்கில்' அசத்தலாம்.
4. "பேட்டிங் பவர்பிளே' கவலை:
லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணி "பேட்டிங் பவர்பிளே' ஓவர்களில் பெரிதும் சொதப்பியது. இதுகுறித்து அதிகம் கவலைப்படாமல், மீதமுள்ள 45 ஓவர்களில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
5. நெருப்புக்கு நெருப்பு:
ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாக களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க சரியான நபர் ஸ்ரீசாந்த் தான். இவரது திறமையான பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய அணியை திணறடிக்கலாம்.
No comments:
Post a Comment