|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 March, 2011

ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகளுக்கு பான்-கீ-மூன் எச்சரிக்கை

பியாவுக்கும் அந்த நாட்டு அதிபர் கடாபிக்கும் ஏற்பட்டுள்ள கதிதான் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகளுக்கு ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார். எகிப்தில் அதிபர் முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மக்கள் வெற்றிபெற்றனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் முபாரக், தானாகவே முன்வந்து பதவி விலகினார். இதனால் அந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து தப்பியது. எகிப்தை தொடர்ந்து பஹ்ரைன், ஏமன், ஓமன் மற்றும் லிபியா துனிசியா ஆகிய நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லிபியாவில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்த அதிபர் கடாபி உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க கூட்டுப்படைகள் லிபியா மீது கடும் தாக்குதலை தொடங்கியுள்ள. இதே நிலைதான் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க வடக்குப்பகுதியில் உள்ள சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளுக்கு ஏற்படும் என்று பான் கீன் மூன் கடுமையாக எச்சரித்துள்ளார். பஹ்ரைன், சிரியா ஏமன் ஆகிய நாடுகளில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது அடக்குமுறையை கையாளுவதற்கு பான் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டம் நடந்து வரும் நாடுகளில் நிலைமை முற்றிலும் விரைவில் மாறுபடும் என்று கெய்ரோவில் அளித்த பேட்டியின் போது பான் கூறினார். இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சர்வதேச சமுதாயம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு உதவ வேண்டிய கடமை இந்த சர்வதேச சமுதாயத்திற்கு உண்டு என்றும் பான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...