எகிப்து, துனிசியா, லிபியாவை தொடர்ந்து சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் பஷார் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் கடந்த 8 நாட்களாக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தலைநகர் டமாஸ்கஸ்-இல் தொடங்கிய இப்போராட்டம் டாரா உள்ளிட்ட 6 நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் பரவியுள்ளது.
இந்நிலையில் நேற்று டமாஸ்கஸ் நகரில் போராட்டம் நடத்த புரட்சி யாளர்கள் பேரணியாக திரண்டனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. எனவே மோதலை தடுக்க போலீசாரும், ராணுவத் தினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் சுமார் 30 பேர் பலியானார்கள். இருந்தும் இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு புரட்சி யாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து சிரியாவில் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 100-க் கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 34 பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment