|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2011

"சரியான திட்டமிடல் இருந்தால், தமிழ்மொழியில் படித்து ஐ.ஏ.எஸ்., ஆகலாம்



"சரியான திட்டமிடல் இருந்தால், தமிழ்மொழியில் படித்து, தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்., ஆகலாம்" என மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பிளஸ் 2 முடித்த உடனே எதிர்காலம் குறித்த திட்டமிடல் இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என நினைத்தால், பொது அறிவுக்காக பத்திரிகைகளை தவறாமல் படிக்க வேண்டும். பொழுதுபோக்காக பக்கங்களை புரட்டாமல், ஒவ்வொரு தகவலையும் பகுத்து ஆராய வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலை, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் விருப்பப்பாடம் என்ற தேர்வுகள் நடத்தப்படும். விருப்பப் பாடப் பிரிவில், பிடித்தமான பாடத்திட்டத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம். ஆங்கிலம் படித்தவர்கள் தான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதில்லை. தமிழிலும் படித்து தேர்வெழுதலாம், வெற்றி பெறலாம். வெறுமனே தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்தால் தான் இலக்கை அடையமுடியும்.

எந்த ஒரு பதவியை அடைய வேண்டுமானாலும், அதற்கேற்ப நமது எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுடன் கலந்துரையாடினால், முழுமையான விளக்கம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.ஏ.எஸ்., ஆவதுடன் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...