தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பெரிதும் வரவேற்பதாகவும், அதன் நடவடிக்கையை கண்டு கருணாநிதிக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,
தமிழக தேர்தலில் சில அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் கருணாநிதி இந்த நடவடிக்கையை கண்டு பதட்டம் அடைந்திருக்கிறார். தனது தரப்பில் தவறு ஏதும் இல்லை எனில் அவர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டிக்க தேவையில்லை. அனைத்து கட்சியினரும் தேர்தல் ஆணைய நடவடிக்கையை பாராட்டும் போது அவருக்கு மட்டும் பயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழக தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு யாருக்கு ஆதரவு என்று தெரிவிப்போம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டங்களை ஒழிப்பது போன்ற தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. கருணாநிதியின் தேர்தல் அறிக்கை ஒரு மாயமான தேர்தல் திட்டமாகும் என்றார்.

No comments:
Post a Comment