|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 June, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை ஏன்? முதல்வர் விளக்கம்

யார் சொன்னாலும் கேட்காமல் இருக்கும் இலங்கையை வழிக்குக் கொண்டு வர ஒரே வழி பொருளாதாரத் தடைதான் என்பதால் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை புதன்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.  அப்போது பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஏ. சவுந்திரராஜன், பொருளாதாரத் தடையால், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, அப்பாவிப் பொது மக்கள்தான் இன்னலுக்கு ஆளாவார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

 முந்தைய அரசு இவ் விஷயத்தில் கடிதங்கள் எழுதுவது என்ற போக்கை கடைபிடித்து "அஞ்சல் வழி அரசாக' இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 உறுப்பினர்களின் கருத்துகளுக்குப் பதில் அளித்த முதல்வர் இதுதொடர்பாக கூறியதாவது: பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை செüந்தரராஜன் இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.

இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான முறைதான்.

 இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...