|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 June, 2011

ஓவியர் எம்.எஃப் ஹூசைன் மரணம்!

பிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் (95)  காலமானார்.  கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லண்டனில் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி 2.30  மணியளவில்  மரணமடைந்தார்.

பாலிவுட் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கி வந்த உசேன்,  சரஸ்வதி உட்பட இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரிaனார்.

இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும், கொலைமிரட்டல்களும் அதிகரித்ததால் 2006-ல் நாட்டைவிட்டு வெளியேறினார். 2010-ம் ஆண்டு அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார். இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இப்போதும் கைது வாரண்டுகள் உள்ளன.1995-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1973-ல் பத்ம பூஷண் விருதும், 1991-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1986-ல் மாநிலங்களவை எம்பியாகவும் நியமிக்கப்பட்டார்.

ஓவியர் உசேன் காலமானது தேசத்திற்கு பேரிழப்பு என்று பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.உசேன் மறைந்தது ஓவிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல்  இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் உசேன் மறைவு ஓவிய உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...