இந்தியாவின் எந்தபகுதியிலும் வங்கிச் சேவையை மேற்கொள்வதற்கான உரிமையை மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியான சரஸ்வத் பேங்க் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த சரஸ்வத் பேங்க் தலைவர் ஏக்நாத் தாகூர் கூறியதாவது, இந்த அனுமதியை பெற்றதன் மூலம் பான் இந்தியா அனுமதி பெற்ற இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கி என்ற பெருமையை தாங்கள் பெற்றுள்ளோம். 93 ஆண்டுகள் பழமை வாழ்ந்த தங்கள் வங்கி, விரைவில் நாட்டின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் தலைநகரான டில்லியிலும், அதனைத் தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிளைகளை அமைக்க உள்ளோம். தற்போது தங்கள் வங்கி சார்பில் 216 கிளைகள் செயல்பட்டு வருவதாகவும், 2016ம் ஆண்டிற்குள், இதனை 500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நாட்டில் உள்ள முன்னி கூட்டுறவு வங்கிகளுள் அதிகளவிலான வர்த்தகச் சேவையை தாங்கள் தான் புரிந்து வருகிறோம். தங்களது வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 28 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. எங்களுக்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் மொத்த வர்தத்கம் ரூ. 27,800 கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கோர் பேங்கிங் சொல்யூசன் சேவைக்காக, சரஸ்வத் பேங்க், ரிலையன்ஸ் ஏடிஏஜியுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment