|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 July, 2011

அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்!

செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில்தான் அதிக நாட்டம் இருக்கிறதாம்.

இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு சொல்லியுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம்.

ஒன்று முதல் 51 ஆண்டு காலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச் சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வுக்காக பேட்டி கண்டு அவர்கள் மூலம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.ஆய்வு முடிவுகளின்படி, திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் கூறுகிறது.

செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 

அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...