|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 July, 2011

ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு பதிவு ரத்து !

காஸ் இணைப்பு உள்ளவர்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

காஸ் இணைப்பு உள்ளவர்கள் மண்ணெண்ணெய் முறைகேடாக பெறுவதை தடுக்கும் வகையில் ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. 
ரேஷன் கார்டில் பதிவு செய்யாதவர்களுக்கு காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யமாட்டோம் என காஸ் ஏஜென்சியினர் தெரிவித்தனர். 


இதனால் தினமும் அதிகாலை முதல் காஸ் ஏஜென்சி முன்பு வாடிக்கையாளர்கள் ரேஷன்கார்டு, காஸ் இணைப்பு புத்தகத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பணியில் தாலுகா அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். காலதாமதம் ஏற்பட்டதால் ஒருசில இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

இந்நிலையில் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் பணியை இன்று முதல் நிறுத்தி வைக்கப்படும்படி உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பதிவு செய்யும் பணி இன்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் காஸ் இணைப்பு பெற்றவர்கள் விவரம் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தா தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...