|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 July, 2011

உலகின் செலவு மிகுந்த நகரம் லுவான்டா...

அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மெர்சர் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் செலவு மிகுந்த மற்றும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வுப் பட்டியலில் மொத்தம் 214 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.


இதில், உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி உலகின் மிகவும் செலவு குறைந்த நகரமாக பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. மாஸ்கோ 4-வது இடத்திலும், ஜெனீவா 5-வது இடத்திலும், லண்டன் 18-வது இடத்திலும், பாரீஸ் 27-வது இடத்திலும், நியூயார்க் 32-வது இடத்திலும் உள்ளன.
வீட்டு வசதி, உணவு, போக்குவரத்து செலவு உட்பட மொத்தம் 200 பிரிவுகளின் கீழ் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...